×

மேற்படிப்புக்காக சென்ற மனைவி; திருமணமான 9 மாதங்களில் அரசு மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை!

லாலு கிருஷ்ணா பளுகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு மருத்துவராக பணியாற்றி கொண்டே பெற்றோருடன் வசித்து வந்தார். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்தவர் லாலு கிருஷ்ணா. இவருக்கும், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மருத்துவரான ஆர்யா என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன் வெகு விமர்சையாக திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்ததும் ஆர்யா மேற்படிப்புக்காக அகமதாபாத் சென்றுவிட்டார். லாலு கிருஷ்ணா பளுகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு மருத்துவராக பணியாற்றி கொண்டே பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில்
 

லாலு கிருஷ்ணா  பளுகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு மருத்துவராக பணியாற்றி கொண்டே  பெற்றோருடன் வசித்து வந்தார். 

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்தவர் லாலு கிருஷ்ணா. இவருக்கும், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மருத்துவரான ஆர்யா என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன் வெகு விமர்சையாக திருமணம் நடந்துள்ளது.  திருமணம் முடிந்ததும் ஆர்யா மேற்படிப்புக்காக அகமதாபாத் சென்றுவிட்டார். லாலு கிருஷ்ணா  பளுகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு மருத்துவராக பணியாற்றி கொண்டே  பெற்றோருடன் வசித்து வந்தார். 

இந்நிலையில் நேற்று முன்தினம்  மனைவியுடன் செல்போனில் பேசி கொண்டிருந்த லாலு கிருஷ்ணா தனது  அறைக்குச் சென்று தாழிட்டு கொண்டார். அவர் வெகுநேரமாகியும் அறையிலிருந்து வெளியே வராததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதவை உடைத்து பார்த்தபோது, லாலு கிருஷ்ணா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. கடந்த சில நாட்களாக லாலு மன உளைச்சலில் இருந்து வந்ததாகத் தெரிகிறது. 

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.