×

மே 3 க்குப் பிறகு, கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்வு!

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த வரும் மே 3ம் தேதி வரை மொத்தம் 40 நாட்கள் ஊரடங்கை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த வரும் மே 3ம் தேதி வரை மொத்தம் 40 நாட்கள் ஊரடங்கை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இதற்கிடையில் கடந்த 20 ஆம் தேதி முதல் சில மாநிலங்கள் குறிப்பிட்ட துறைகள் இயங்கும் வகையில் ஊரடங்கு விதிமுறைகளை தளர்த்தின. ஆனால் டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் ஊரடங்கு தளர்வு கிடையாது
 

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த வரும் மே 3ம் தேதி வரை மொத்தம் 40 நாட்கள் ஊரடங்கை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த வரும் மே 3ம் தேதி வரை மொத்தம் 40 நாட்கள் ஊரடங்கை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இதற்கிடையில் கடந்த 20 ஆம் தேதி முதல் சில மாநிலங்கள் குறிப்பிட்ட துறைகள் இயங்கும் வகையில் ஊரடங்கு விதிமுறைகளை தளர்த்தின. ஆனால் டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் ஊரடங்கு தளர்வு கிடையாது என அறிவித்தன. இந்நிலையில் கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால் நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்ற கவலை மக்கள் மத்தியில் நிலவுகிறது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையி, “நாடு முழுவதும் மே 3 க்குப் பிறகு, கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பல மாவட்டங்களுக்கு ஊரடங்கில் இருந்து சில தளர்வுகள் அளிக்கப்படும். இது தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத 14 மாவட்டங்களில் ஊரடங்கை தளர்த்தி கடைகள், தொழில் நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டது.