மெகா கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பை அரித்த கொரோனா வைரஸ்….. அமேசான் நிறுவனர் ஜெப் பிசோசுக்கு சேதம் கொஞ்சம் அதிகம்….
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில தினங்களில் உலக பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட பெரும் சரிவால் தொழில்நுட்ட துறையை சேர்ந்த மெகா கோடீஸ்வரர்கள் பல ஆயிரம் கோடியை இழந்துள்ளனர்
கொரோனா வைரஸ் உலக முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று நோய் என அறிவிக்கப்பட்டதையடுத்து உலக பங்குச் சந்தைகளில் கடும் சரிவை சந்தித்தது. இதனால் சிறு முதலீட்டாளர் முதல் பெரிய கோடீஸ்வரர்கள் வரை நஷ்டம் அடைந்தனர். குறிப்பாக கடந்த சில தினங்களில் தொழில்நுட்ப துறையில் சர்வதேச அளவில் டாப் 10 மெகா கோடீஸ்வரர்கள் இழந்த சொத்து மதிப்பு (13ம் தேதி அப்டேட்) குறித்து புளூம்பெர்க் அறிக்கை வெளியிட்டுள்ளது.
டாப் 10 மெகாகோடீஸ்வரர்கள் இழந்த சொத்து மதிப்பு
ஜெப் பிசோஸ் ரூ.60,236 கோடி
பில்கேட்ஸ் ரூ.51,652 கோடி
மார்க் சுக்கர்பெர்க் ரூ.43,586 கோடி
லாரி பேஜ் ரூ.32,116 கோடி
செர்ஜி பிரின் ரூ.31,228 கோடி
ஸ்டீவ் பால்மெர் ரூ.35,594 கோடி
லாரி எல்லிசன் ரூ.35,298 கோடி
ஜாக் மா ரூ.14,356 கோடி
முகேஷ் அம்பானி ரூ.24,790 கோடி
போனி மா ரூ.10,730 கோடி