×

முஸ்லிம் வாலிபருக்கு,  இந்து திருமண சட்டப்படி தண்டனை!  நீதிபதிக்கு ஐகோர்ட் சம்மன்! 

முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்வதற்கு தடை விதித்து சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் அமலுக்கும் தற்போது வந்துள்ளது. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் வசித்து வரும் முஸ்லிம் தம்பதியருக்கிடையே மோதல் வலுத்து, குடும்ப நல நீதிமன்றத்திற்கு சென்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இருவருக்கும் விவாகரத்து வழங்கி, மனைவிக்கு அந்த முஸ்லீம் கணவர் இடைக்கால ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று இந்து திருமணச் சட்டப்பிரிவைப் பயன்படுத்தி உத்தரவிட்டார். குடும்ப நல நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, அந்த
 
முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்வதற்கு தடை விதித்து சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் அமலுக்கும் தற்போது வந்துள்ளது. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் வசித்து வரும் முஸ்லிம் தம்பதியருக்கிடையே மோதல் வலுத்து, குடும்ப நல நீதிமன்றத்திற்கு சென்றது.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இருவருக்கும் விவாகரத்து வழங்கி, மனைவிக்கு அந்த முஸ்லீம் கணவர் இடைக்கால ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று இந்து திருமணச் சட்டப்பிரிவைப் பயன்படுத்தி உத்தரவிட்டார்.  குடும்ப நல நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, அந்த முஸ்லிம் கணவர் அலகாபாத் ஐகோர்ட்டுக்கு சென்றார். 

அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்து திருமண சட்டத்தைப் பயன்படுத்தி தீர்ப்பு வழங்கியது தவறு என்று கூறி இந்த தீர்ப்பை வழங்கிய குடும்ப நல நீதிமன்ற நீதிபதிக்கு நேரில் ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பி உத்தரவிட்டனர். இதற்கிடையே இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி பணிமாறுதலில் வேறு இடத்திற்குச் சென்று விட்டார். புதிதாக பதவியேற்ற நீதிபதிக்கு சம்மன் சென்றது. இதையடுத்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆஜரான நீதிபதி மனோஜ்குமார், ஐகோர்ட் நீதிபதிகளிடம், எனக்கு எப்படி நீங்கள் சம்மன் அனுப்பலாம்? ஒரு நீதிபதியின் தீர்ப்பில் தவறு என்றால், நீங்கள் அதை ரத்து செய்யலாம். மாறாக, எப்படி சம்மன் அனுப்பலாம்?

மேலும், குறிப்பிட்ட உத்தரவை பிறப்பித்த நீதிபதி போய் விட்டார். எனக்கும் அந்த தீர்ப்புக்கும் சம்பந்தமில்லை என்ற சத்தம் போட்டு பேசினார். இதில் அதிருப்தியடைந்த நீதிபதிகள் அனில்குமார், சவுரவ் ஆகியோர், குடும்பநல நீதிமன்ற நீதிபதியின் செயலை கண்டித்தனர். ஆனாலும், அவர் விடாமல் சண்டை போட்டார். இதையடுத்து, நீதிபதிகள், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் ஒரு நீதிபதியே செயல்படக் கூடாது. ஒரு நீதிபதி தவறான சட்டத்தில் தீர்ப்பு வழங்கினால், அவரை அழைத்து கண்டிக்க ஐகோர்ட்டுக்கு உரிமை உண்டு என்று கூறி தங்கள் தீர்ப்பில் மனோஜ்குமாரின் செயலை குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்தனர்.