×

முழு ஊரடங்கிற்கு அவசியமில்லை – பிரதமர் மோடி

நாடு முழுவதும் கொரோனா அதிகரித்துவரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக 2 நாட்களாக பிரதமர் மோடி பல்வேறு துறையினருடன் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து நாட்டுமக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, “முகக்கவசம் முதல் வெண்டிலேட்டர் வரை பெரிய அளவில் உற்பத்தி செய்து மருத்துவ சாதனை செய்துள்ளோம். கடந்த வருடம் இருந்த மோசமான சூழல் தற்போது இல்லை. கொரோனாவை எதிர்கொள்ள கடந்த முறை நம்மிடம் போதிய உட்கட்டமைப்புகள் இல்லை. ஆனால் தற்போது அவை உள்ளன. கொரோனா பரவல்
 

நாடு முழுவதும் கொரோனா அதிகரித்துவரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக 2 நாட்களாக பிரதமர் மோடி பல்வேறு துறையினருடன் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து நாட்டுமக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, “முகக்கவசம் முதல் வெண்டிலேட்டர் வரை பெரிய அளவில் உற்பத்தி செய்து மருத்துவ சாதனை செய்துள்ளோம். கடந்த வருடம் இருந்த மோசமான சூழல் தற்போது இல்லை. கொரோனாவை எதிர்கொள்ள கடந்த முறை நம்மிடம் போதிய உட்கட்டமைப்புகள் இல்லை. ஆனால் தற்போது அவை உள்ளன. கொரோனா பரவல் சூழலில் தற்போதைய தேவை கூட்டுமுயற்சிதான்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கிற்கு அவசியமில்லை. கொரோனா வைரஸ்க்கு எதிரான போரின் கடைசி முயற்சிதான் ஊரடங்கு. அடுக்குமாடி குடியிருப்புகள், தெருக்களில் குழு அமைத்து தடுப்பூசி போடும் பணியை விரைவுப்படுத்துவோம்.அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம். முடிந்தவரை வீட்டிலிருந்தே பணியாற்ற முன்வர வேண்டும்.கொரோனாவுக்கு எதிரான போரில் சரியான விஷயங்களை செய்ய இளைஞர்கள் முன்வர வேண்டும்” என தெரிவித்தார்.