×

மும்பையில் டான்ஸ் பார்களுக்கு அனுமதி; கட்டுப்பாடுகளை தளர்த்தி உச்ச நீதிமன்றம் அதிரடி

மகாராஷ்டிர மாநிலத்தில் நடன பார்களுக்கு அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்றம், நடன பார்கள் நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகளையும் தளர்த்தியுள்ளது புதுதில்லி: மகாராஷ்டிர மாநிலத்தில் நடன பார்களுக்கு அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்றம், நடன பார்கள் நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகளையும் தளர்த்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத் தலைநகர் மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மது பார்களில் இளம்பெண்களின் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு தடை விதிக்கும் பொருட்டு 2005-ஆம் ஆண்டு முதலே புதிய நடன பார்களுக்கு
 

மகாராஷ்டிர மாநிலத்தில் நடன பார்களுக்கு அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்றம், நடன பார்கள் நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகளையும் தளர்த்தியுள்ளது

புதுதில்லி: மகாராஷ்டிர மாநிலத்தில் நடன பார்களுக்கு அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்றம், நடன பார்கள் நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகளையும் தளர்த்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத் தலைநகர் மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மது பார்களில் இளம்பெண்களின் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு தடை விதிக்கும் பொருட்டு 2005-ஆம் ஆண்டு முதலே புதிய நடன பார்களுக்கு உரிமம் வழங்கப்படவில்லை.

அதேபோல், டான்ஸ் பார் முறைப்படுத்துதல் சட்டத்தை கடந்த 2016-ஆம் ஆண்டில் மகாராஷ்டிர மாநில அரசு கொண்டு வந்தது. இது தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், லைசென்ஸ் பெறுவதில் பெரும் சிக்கல் இருப்பதாகவும் கூறி ஹோட்டல், பார் உரிமையாளர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. மகாராஷ்டிர மாநலத்தில் நடன பார்களுக்கு அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்றம், நடன பார்கள் நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகளையும் தளர்த்தியும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

டான்ஸ் பார்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது தனி மனித உரிமைகளை மீறும் செயல் என கூறி அதனை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பார் அறைகளும், டான்ஸ் ஆடும் இடங்களும் தனித்து வைக்கப்பட்டிருந்தன. அந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. டான்ஸ் பாரின் உரிமையாளர் நல்ல குணம் உடையவராக இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கருத்து கூறியுள்ள உச்ச நீதிமன்றம் நல்ல குணம் என்று எதுவும் வரையறுக்கப்படவில்லை என்று கூறி அந்த கட்டுப்பாடை நீக்கியுள்ளது.

பார்கள் நடத்துவதை முறைப்படுத்தலாமே தவிர, அவற்றுக்கு தடை விதிக்க முடியாது என கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், வழிபாட்டு தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இருந்து ஒரு கி.மீ., தொலைவிலேயே நடன பார்கள் இருக்க வேண்டும் என்ற தடையையும் ரத்து செய்துள்ளது. பெரிய நகரங்களில் இது சாத்தியம் அல்ல என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

பார்களில் நடனம் ஆடுவோருக்கு பரிசு வழங்கலாம். ஆனால் பணத்தை வாரி மழை போல் இரைக்கக் கூடாது. மாலை 6 முதல் இரவு 11.30 மணி வரை மட்டுமே நடன பார்கள் இயங்க வேண்டும் என்ற மாநில அரசின் வரையரை தொடரும்