×

முன்னாள் பிரதமர்கள், குடியரசுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

முன்னாள் பிரதமர்கள், குடியரசுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லி: முன்னாள் பிரதமர்கள், குடியரசுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் கொரோனா தொற்று இதுவரை 3374 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை 79 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 267 பேர் கொரோனா நோயில் இருந்து குணமாகி உள்ளனர். நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 472 பேருக்கு கொரோனா தொற்று
 

முன்னாள் பிரதமர்கள், குடியரசுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லி: முன்னாள் பிரதமர்கள், குடியரசுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் கொரோனா தொற்று இதுவரை 3374 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை  79 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 267 பேர் கொரோனா நோயில் இருந்து குணமாகி உள்ளனர். நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங் மற்றும் தேவ கவுடா ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் முன்னாள் குடியரசுத்தலைவர்கள் பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதீபா பாட்டீல் ஆகியோருடனும் பிரதமர் ஆலோசனை நடத்தியதாக தெரியவந்துள்ளது. அத்துடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, சந்திரசேகர ராவ், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோருடனும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.