×

மீனவர் குடும்பத்து ரூ.10 லட்சம் உதவி… மணல் பதுக்கினால் ரூ.2 லட்சம் அபராதம்… தொடரும் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடிகள்!

விபத்தில் உயிரிழக்கும் மீனவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்குவது, ஆற்றுமணலை பதுக்குபவருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிப்பது என்பது உள்பட பல்வேறு அதிரடி முடிவுகளை ஜெகன் மோகன் ரெட்டி அரசு எடுத்துள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூர் வெலகம்பூண்டியில் உள்ள தலைமைச் செயலகத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தித் துறை அமைச்சர் பெர்னி நானி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். விபத்தில் உயிரிழக்கும்
 

விபத்தில் உயிரிழக்கும் மீனவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்குவது, ஆற்றுமணலை பதுக்குபவருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிப்பது என்பது உள்பட பல்வேறு அதிரடி முடிவுகளை ஜெகன் மோகன் ரெட்டி அரசு எடுத்துள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூர் வெலகம்பூண்டியில் உள்ள தலைமைச் செயலகத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தித் துறை அமைச்சர் பெர்னி நானி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

விபத்தில் உயிரிழக்கும் மீனவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்குவது, ஆற்றுமணலை பதுக்குபவருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிப்பது என்பது உள்பட பல்வேறு அதிரடி முடிவுகளை ஜெகன் மோகன் ரெட்டி அரசு எடுத்துள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூர் வெலகம்பூண்டியில் உள்ள தலைமைச் செயலகத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தித் துறை அமைச்சர் பெர்னி நானி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“மாநிலம் முழுவதும் மணல் கடத்தல் மற்றும் அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் அதிக விலைக்கு மணல் விற்பனை செய்தால், முறைகேடாக பதுக்கி விற்பனை செய்தால் அவர்களுக்கு ரூ. லட்சம் வரை அபராதம் மற்றும் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் 6 முதல் 9ம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வி கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. பின்தங்கிய மக்களின் பிள்ளைகளும் ஆங்கில வழிக் கல்வியைப் பெற வேண்டும் என்ற நோக்கில் ஆங்கில வழிக் கல்வி கொண்டு வரப்படுகிறது.
கடலுக்குள் செல்லும் மீனவர்கள் விபத்தில் உயிரிழந்தால் அவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு 5 லட்சத்திலிருந்து 10 லட்ச ரூபாயாக உயர்த்தப்படுகிறது. காணிப்பாக்கும், ஶ்ரீகாளஹஸ்தி உள்ளிட்ட எட்டு கோவில்களுக்கு அறங்காவலர் குழு உருவாக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.