×

மீண்டும் மோடி தான் பிரதமரா? ஆன்லைன் சர்வேயில் தகவல்!

டெல்லி: மோடி மீண்டும் பிரதமராக 50 சதவிகித மக்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாக தனியார் நிறுவனம் நடத்திய ஆன்லைன் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. பிரதமர் மோடிக்கு உள்ள செல்வாக்கு குறித்து இந்தியா முழுவதும் ஆன்லைன் கருத்துக் கணிப்பு ஒன்றை தனியார் இணையதள செய்தி நிறுவனம் நடத்தியது. அந்த சர்வேயில் சுமார் 54 லட்சம் பேர் வாக்களித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நான்காண்டு கால ஆட்சிக்கு 63 சதவீதம் பேர் நம்பிக்கை தெரிவித்ததாகவும், அவர்
 

டெல்லி: மோடி மீண்டும் பிரதமராக 50 சதவிகித மக்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாக தனியார் நிறுவனம் நடத்திய ஆன்லைன் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

பிரதமர் மோடிக்கு உள்ள செல்வாக்கு குறித்து இந்தியா முழுவதும் ஆன்லைன் கருத்துக் கணிப்பு ஒன்றை தனியார் இணையதள செய்தி நிறுவனம் நடத்தியது.

அந்த சர்வேயில் சுமார் 54 லட்சம் பேர் வாக்களித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நான்காண்டு கால ஆட்சிக்கு 63 சதவீதம் பேர் நம்பிக்கை தெரிவித்ததாகவும், அவர் மீண்டும் பிரதமராக 50 சதவீதம் மக்கள் ஆதரிப்பதாகவும் அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

அந்த கருத்துக் கணிப்பை பொய் தகவல் பரப்பும் பாஜகவின் வேலை என்றும் அந்த வீண்வேலை பலன் தராது என்றும் காங்கிரஸ் கட்சி உதாசினப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.