×

மிஸ் இந்தியா படத்தை தட்டி சென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்!

மிஸ் இந்தியா 2019-ஆம் ஆண்டிற்கான பட்டத்தை ராஜஸ்தானைச் சேர்ந்த சுமன் ராவ் என்பவர் தட்டிச் சென்றுள்ளார். சென்னை: மிஸ் இந்தியா 2019-ஆம் ஆண்டிற்கான பட்டத்தை ராஜஸ்தானைச் சேர்ந்த சுமன் ராவ் என்பவர் தட்டிச் சென்றுள்ளார். வருடா வருடம் மிஸ் இந்தியா போட்டிகள் நடைபெறும். அதில் இந்த வருடத்திற்கான போட்டி நேற்று நடைபெற்றது.அதில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் பல பெண்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் உலக அழகி மானுஷி சில்லர், திரைப்பட நடிகர்கள் மற்றும்
 

மிஸ் இந்தியா 2019-ஆம் ஆண்டிற்கான பட்டத்தை ராஜஸ்தானைச் சேர்ந்த சுமன் ராவ் என்பவர் தட்டிச் சென்றுள்ளார். 

சென்னை: மிஸ் இந்தியா 2019-ஆம் ஆண்டிற்கான பட்டத்தை ராஜஸ்தானைச் சேர்ந்த சுமன் ராவ் என்பவர் தட்டிச் சென்றுள்ளார். 

வருடா வருடம் மிஸ் இந்தியா போட்டிகள் நடைபெறும். அதில் இந்த வருடத்திற்கான போட்டி நேற்று நடைபெற்றது.அதில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் பல பெண்கள் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் உலக அழகி மானுஷி சில்லர், திரைப்பட நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் என்று பலர் கலந்து கொண்டனர். இறுதிச்சுற்றில் ராஜஸ்தானை சேர்ந்த 22 வயது சுமன் ராவ் என்பவர் மிஸ் இந்தியா பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார். இவருக்கு கடந்த  ஆண்டு மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த அனுக்ரீத்தி வாஸ் கிரீடத்தினை சூட்டினார். 

தெலுங்கானாவைச் சேர்ந்த சஞ்சனா விஜ் என்பவர் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இது தவிர நேற்றைய இறுதி போட்டியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரேயா சங்கர் மிஸ் இந்தியா யுனைட்டட் பட்டத்தினையும், சட்டீஸ்கரைச் சேர்ந்த ஷிவானி என்பவர் மிஸ் கிராண்ட் இந்தியா பட்டங்களையும் வென்றுள்ளார்.

மேலும் இந்தியா அழகியாகத் தேர்வாகி உள்ள சுமன் ராவ் டிசம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெறும் உள்ள உலக அழகிப் போட்டியில் பங்குயேற்கவுள்ளார்.