×

மார்ச் 22 முதல் ரத்து செய்யப்பட்ட ரயில்களின் கட்டணம் திருப்பிக் கொடுக்கப்படும் – தெற்கு ரயில்வே

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் போக்குவரத்து சேவை முடக்கப்பட்டதால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. அதனால் முன்பதிவு செய்த பயணிகள் டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்காக ரயில் நிலையங்களுக்கு மக்கள் வர வேண்டாம் என்றும் அதனை ரத்து செய்ய 3 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் ரயில்வே
 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் போக்குவரத்து சேவை முடக்கப்பட்டதால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. அதனால் முன்பதிவு செய்த பயணிகள் டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதற்காக ரயில் நிலையங்களுக்கு மக்கள் வர வேண்டாம் என்றும் அதனை ரத்து செய்ய 3 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியது. அதே போல ரத்து செய்யப்படாத ரயில்களில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் டிக்கெட்டை ரத்து செய்ய 3 மாதம் கால அவகாசம் கொடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ரத்து செய்யப்பட்ட ரயில்களில் முன்பதிவு செய்த பயணிகளின் பணத்தை திருப்பி கொடுக்க அட்டவணை தயார் செய்யப்பட்டு வருதாகவும் இதன் முழு விவரம் விரைவில் வெளியாகும் என்றும் தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜூன் 30 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு, ஐ.ஆர்.சி.டி.சி தானாகவே முழு பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடும் என்றும் பயனர்கள் தங்கள் மின் டிக்கெட்டுகளை ரத்து செய்ய தேவையில்லை என்றும் கட்டணம் செலுத்தப்பட்ட பயனர்களின் கணக்குகளிலேயே மீண்டும் பணம் திருப்பி செலுத்தப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், https://t.co/3jWNS1oDIV என்ற இணையதளம் மூலம் 100% டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.