×

மாணவர்கள் போராட்டத்தின் போது பேருந்துக்கு தீ வைப்பு, தடியடி: கலவர பூமியாக மாறிய டெல்லி!

இதனால் போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தினர். இதனால் ஓக்லா அண்டர்பாஸ்-லிருந்து சரிதா விஹார் வரை வாகனப் போக்குவரத்து முடங்கியது திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்குக் குடியுரிமையை வழங்குகிறது. இதற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக டெல்லியிலுள்ள நியூ பிரண்ட்ஸ் காலனியில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். அப்போது
 

இதனால் போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர்ப்புகை  தாக்குதல் நடத்தினர்.  இதனால் ஓக்லா அண்டர்பாஸ்-லிருந்து சரிதா விஹார் வரை வாகனப் போக்குவரத்து முடங்கியது

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்குக் குடியுரிமையை வழங்குகிறது. இதற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. 

இந்நிலையில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக டெல்லியிலுள்ள நியூ பிரண்ட்ஸ் காலனியில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர்  பங்கேற்றனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அரசு பேருந்துகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர்ப்புகை  தாக்குதல் நடத்தினர்.  இதனால் ஓக்லா அண்டர்பாஸ்-லிருந்து சரிதா விஹார் வரை வாகனப் போக்குவரத்து முடங்கியது. மேலும் மாணவர்கள் போராட்டத்தைத் தடுக்கும் வகையில், டெல்லியில் 15 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தெற்கு டெல்லியில் ஜாமியா, ஓக்லா, நியூ பிரண்ட்ஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் உத்தரப் பிரதேச மாநிலம் அலிகர் பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்திலும்  வன்முறை வெடித்தது. பல்கலைக்கழக  வளாகத்தில் கல்வீச்சு,  தீ வைப்பு போன்ற சம்பவங்கள் நடந்தது. இதனால் போலீசார் நடத்திய தடியடியில் 60 மாணவர்கள் காயம் அடைந்தனர். வரும் 5 ஆம் தேதி வரை பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

வாரணாசி, கொல்கத்தா  போன்ற பகுதிகளிலும் போராட்டம் நடந்ததைத் தொடர்ந்து கேரளாவிலும் மாணவர்கள் ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.