×

மாணவர்களை அடிக்கவில்லை என்று காவல்துறையும், உள்துறை அமைச்சரும் பொய் சொல்கிறார்கள் : பிரியங்கா காந்தி ட்வீட்!

அந்த போராட்டத்தின் போது, மாணவர்களை அங்கிருந்து கலைப்பதற்காக மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதிலும் போராட்டம் நடைபெற்றது. அதே போல டெல்லி ஜாமியா பல்கலைக் கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தின் போது, மாணவர்களை அங்கிருந்து கலைப்பதற்காக மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் பல மாணவர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. ஜாமியா மாணவர்கள் மீதான இந்த தாக்குதல்களுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்தனர். அச்சமயம் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் டெல்லி
 

அந்த போராட்டத்தின் போது, மாணவர்களை அங்கிருந்து கலைப்பதற்காக மாணவர்கள் மீது தடியடி நடத்தினர்.

குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதிலும் போராட்டம் நடைபெற்றது. அதே போல டெல்லி ஜாமியா பல்கலைக் கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தின் போது, மாணவர்களை அங்கிருந்து கலைப்பதற்காக மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் பல மாணவர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. ஜாமியா மாணவர்கள் மீதான இந்த தாக்குதல்களுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்தனர். 

அச்சமயம் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் டெல்லி காவல்துறையினரும் மாணவர்களை அடிக்கவில்லை என்று கூறினார்கள். ஆனால், அவர்கள் கூறியது உண்மையல்ல என்பதை நிரூபிக்க ஜாமியா பல்கலைக் கழகம் அதன் சிசிடிவி காட்சிகளை இன்று வெளியிட்டது. அதில் நூலகத்தின் உள்ளே புகுந்த போலீசார், படித்துக் கொண்டிருந்த மாணவர்களை லத்தியால் கண்மூடித்தனமாக தாக்குகின்றனர். இந்த வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்து பிரியங்கா காந்தி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” டெல்லி காவல்துறை கண்மூடித்தனமாகப் படிக்கும் மாணவர்களை எப்படி அடித்துக்கொள்கிறது என்று பாருங்கள். ஒரு சிறுவன் புத்தகத்தைக் காட்டுகிறான், ஆனால் போலீஸ்காரர் குச்சிகளைக் கொண்டு அடிக்கிறார்கள். 
உள்துறை அமைச்சரும் டெல்லி காவல்துறை அதிகாரிகளும் நூலகத்திற்குள் நுழைந்து யாரையும் அடிக்கவில்லை என்று பொய் சொன்னார்கள் …இந்த வீடியோவைப் பார்த்த பிறகு, ஜாமியாவில் வன்முறை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால், அரசாங்கத்தின் நோக்கம் நாட்டிற்கு முழுமையாக வெளிப்படும்.” என்று பதிவிட்டுள்ளார்.