×

மஹாலஷ்மியை மீட்க தேசிய பேரிட மீட்புப்படை தீவிரம்! 150 பயணிகள் மீட்பு!

தேசிய பேரிட மீட்புப்படையின் எட்டு பிரிவினர் உயிர்காக்கும் படகுகள், மிதவை சட்டைகள், மற்றும் உபகரணங்களோடு விரைந்துள்ளனர். மீட்புக்குழுவினருக்கு உதவுவதற்காக கடற்படையிலிருந்து ஹெலிகாப்டர் மற்றும் நீச்சல்வீரர்களுடன் பறந்துவந்துள்ளது. மதியம் 12 மணி நிலவரப்படி பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 150 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மும்பையிலிருந்து கோலாப்பூருக்கு 700 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த மஹாலஷ்மி எக்ஸ்பிரஸ், தண்டவாளங்களில் வெள்ள நீர் சூழ்ந்ததால், சனிக்கிழமை விடிகாலை 3 மணிமுதல் நகரமுடியாமல் சிக்கி நிற்கிறது. மத்திய ரயில்வே அதிகாரிகள் தகவல்படி, ரயிலில் 700 பயணிகள் இருக்கிறார்கள்
 

தேசிய பேரிட மீட்புப்படையின் எட்டு பிரிவினர் உயிர்காக்கும் படகுகள், மிதவை சட்டைகள், மற்றும் உபகரணங்களோடு விரைந்துள்ளனர். மீட்புக்குழுவினருக்கு உதவுவதற்காக கடற்படையிலிருந்து ஹெலிகாப்டர் மற்றும் நீச்சல்வீரர்களுடன் பறந்துவந்துள்ளது. மதியம் 12 மணி நிலவரப்படி பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 150 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

மும்பையிலிருந்து கோலாப்பூருக்கு 700 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த மஹாலஷ்மி எக்ஸ்பிரஸ், தண்டவாளங்களில் வெள்ள நீர் சூழ்ந்ததால், சனிக்கிழமை விடிகாலை 3 மணிமுதல் நகரமுடியாமல் சிக்கி நிற்கிறது.

மத்திய ரயில்வே அதிகாரிகள் தகவல்படி, ரயிலில் 700 பயணிகள் இருக்கிறார்கள் என்றாலும், உள்ளூர் அதிகாரிகள்கூற்றுப்படி தோராயமாக 2000 பேர் ரயிலில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ரிசர்வேஷன் செய்தவர்களை மட்டும் கணக்கில்கொண்டு மத்திய ரயில்வே அப்படி கூறியதா என்ற விவாதத்தை பிறகு வைத்துக்கொள்வோம். இப்போதைக்கு, பயணிகளை மீட்க தேசிய பேரிடம் மீட்புப்படை களத்திற்கு விரைந்துள்ளனர்.

தேசிய பேரிட மீட்புப்படையின் எட்டு பிரிவினர் உயிர்காக்கும் படகுகள், மிதவை சட்டைகள், மற்றும் உபகரணங்களோடு விரைந்துள்ளனர். மீட்புக்குழுவினருக்கு உதவுவதற்காக கடற்படையிலிருந்து ஹெலிகாப்டர் மற்றும் நீச்சல்வீரர்களுடன் பறந்துவந்துள்ளது.  மதியம் 12 மணி நிலவரப்படி பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட  150 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 15 மணி நேரமாக ரயில் சிக்கியிருப்பதால், ரயிலில் இருக்கும் பயணிகளுக்கான உணவு மற்றும் குடிநீர் அனுப்பப்பட்டுள்ளது. முட்டியளவு நீரில் அதுவும் தரையில் சிக்கியிருக்கும் ரயிலை மீட்பதற்காக தாமதிக்காமல் பறந்துவந்த கடற்படை ஹெலிகாப்டர், கன்னியாகுமரி மீனவர்கள் நடுக்கடலில் தத்தளிக்கும்போது வரவில்லையே என்ற கவலையையும்மீறி, அவர்களின் பணியை போற்றுவோம்!