×

மனிதர்களிடம் இருந்து குரங்குகளுக்கு கொரோனா பரவ வாய்ப்பு – கேரள முதல்வர் எச்சரிக்கை

மனிதர்களிடம் இருந்து குரங்குகளுக்கு கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கொச்சி: மனிதர்களிடம் இருந்து குரங்குகளுக்கு கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி ஏப்ரல் 09 அன்று காலை 8:00 மணி நிலவரப்படி 9 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் கேரளாவில் பதிவாகியுள்ளன. இது கேரளாவில் மொத்தமாக கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களை 345
 

மனிதர்களிடம் இருந்து குரங்குகளுக்கு கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

கொச்சி: மனிதர்களிடம் இருந்து குரங்குகளுக்கு கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி ஏப்ரல் 09 அன்று காலை 8:00 மணி நிலவரப்படி 9 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் கேரளாவில் பதிவாகியுள்ளன. இது கேரளாவில் மொத்தமாக கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களை 345 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 83 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். கேரளாவில் 2 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.

இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில் மனிதர்களிடம் இருந்து குரங்குகளுக்கு கொரோனா தொற்று பரவ வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார். எனவே கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் குரங்குகளுக்கு உணவு அளிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார். அத்துடன் காடுகளை ஒட்டிய பகுதிகளில் குரங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் தலையீடு காரணமாக வயநாடு பகுதியில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டதாக வரும் செய்திகளை அவர் மறுத்தார்.