×

“மனிதம் ஒன்றே தீர்வு”…உயிரிழந்த இந்து பெண்ணின் உடலை தோளில் சுமந்து அடக்கம் செய்த இஸ்லாமியர்கள்!

“மனிதம் இன்னும் மரித்து விடவில்லை” என்பதை உணர்த்தியுள்ளனர் அந்த இளைஞர்கள். மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் பகுதியை சேர்ந்த 65 வயது மூதாட்டி ஒருவர், நீண்ட காலமாக நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இவரது மகன்கள் இரண்டு பேரும் வெளிநாடுகளில் வேலை செய்து வருகின்றார்களாம். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை அந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸால் உலக நாடுகள் முடக்கப்பட்டுள்ளதால், அந்த மூதாட்டியின் மகன்கள் மிகவும் தாமதமாக வந்துள்ளனர். இதனிடையே, கொரோனா அச்சத்தால் மூதாட்டியின் உறவினர்கள் கூட
 

“மனிதம் இன்னும் மரித்து விடவில்லை” என்பதை உணர்த்தியுள்ளனர் அந்த இளைஞர்கள்.  

மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் பகுதியை சேர்ந்த 65 வயது மூதாட்டி ஒருவர், நீண்ட காலமாக நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இவரது மகன்கள் இரண்டு பேரும் வெளிநாடுகளில் வேலை செய்து வருகின்றார்களாம். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை அந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸால் உலக நாடுகள் முடக்கப்பட்டுள்ளதால், அந்த மூதாட்டியின் மகன்கள் மிகவும் தாமதமாக வந்துள்ளனர். 

இதனிடையே, கொரோனா அச்சத்தால் மூதாட்டியின் உறவினர்கள் கூட இறுதி அஞ்சலி செலுத்த வராத நிலையில், மூதாட்டியை யார் அடக்கம் செய்வது என பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், மூதாட்டியின் உடலை கொண்டு செல்ல எந்த வாகனமும் கிடைக்கவில்லையாம். இந்த இக்கட்டான சூழலில், மூதாட்டியின் வீட்டுக்கு அருகே வசித்து வந்த இஸ்லாமியர்கள், மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். 

அச்சமயம் மூதாட்டியின் மகன்களும் வந்து விட்டதால், அவர்களுடன் சேர்ந்து இஸ்லாமிய இளைஞர்கள் சுமார் 2.5 கி.மீ தோளில் சுமந்து சென்று அடக்கம் செய்துள்ளனர். அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. மதம் பாராமல் அந்த இளைஞர்கள் செய்த செயலுக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். இனம், மதம், மொழி உள்ளிட்ட பல்வேறு பிரிவினைகள் நமக்குள் இருப்பினும், “மனிதம் இன்னும் மரித்து விடவில்லை” என்பதை உணர்த்தியுள்ளனர் அந்த இளைஞர்கள்.