×

மத்திய அரசை கண்டித்து நாளை பாரத் பந்த்! வங்கி சேவைகளும் பாதிக்கும் ஆபத்து!

தொழிலாளர்களுக்கு எதிரான மத்திய அரசின் கொள்கைகளை கண்டித்து நாளை நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட 10 மத்திய வர்த்தக தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதில் வங்கி சங்கங்களும் கலந்து கொள்ள இருப்பதால் வங்கி சேவைகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சி.ஐ.டி.யு., எல்.பி.எப்., எச்.எம்.எஸ்., டி.யு.சி.சி. மற்றும் எஸ்.இ.டபிள்யூ.ஏ. உள்பட 10 மத்திய வர்த்தக தொழிற்சங்கங்கள் மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கையை கண்டித்தும், பரிந்துரைக்கப்பட்ட தொழிலாளர் சீர்திருத்தத்தை நீக்குதல், குறைந்தபட்ச மாத ஊதியத்தை ரூ. 21,000-24,000
 

தொழிலாளர்களுக்கு எதிரான மத்திய அரசின் கொள்கைகளை கண்டித்து நாளை நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட 10 மத்திய வர்த்தக தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதில் வங்கி சங்கங்களும் கலந்து கொள்ள இருப்பதால் வங்கி சேவைகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சி.ஐ.டி.யு., எல்.பி.எப்., எச்.எம்.எஸ்., டி.யு.சி.சி. மற்றும் எஸ்.இ.டபிள்யூ.ஏ. உள்பட 10 மத்திய வர்த்தக தொழிற்சங்கங்கள் மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கையை கண்டித்தும், பரிந்துரைக்கப்பட்ட தொழிலாளர் சீர்திருத்தத்தை நீக்குதல், குறைந்தபட்ச மாத ஊதியத்தை ரூ. 21,000-24,000 உயர்த்துதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயாக்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்பது உள்பட  14 கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாடு முழுவதும் நாளை ஒரு நாள் மட்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளன. 

நாளை நடைபெறும் வேலை நிறுத்தத்தில் வங்கி துறையை சேர்ந்த முக்கிய சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன. இதனால் வங்கி சேவைகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம் ஆன்லைன் பேங்கிங் சேவையில் எந்தவித தடையும் இருக்காது என தகவல். மேலும் இந்த வேலை நிறுத்தத்தில் பல கோடி பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள வேலை நிறுத்ததுக்கு சிவ சேனா, தி.மு.க. மற்றும் ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக சிவ சேனாவின் சஞ்சய் ரவுத் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு தொழிலாளர்களுக்கு எதிரான கொள்கைகளை அமல்படுத்தியுள்ளது. அதனை நாங்கள் எதிர்க்கிறோம் என தெரிவித்தார்.