×

மத்திய அரசு ஊழியர்களின் பணி ஓய்வு இனி 33 ஆண்டு அல்லது 60 வயது !

மத்திய அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு பெரும் வயதைக் குறைப்பதற்கான முடிவில் மத்திய அரசு ஈடுபட்டது. மத்திய அரசு ஊழியர்கள் 60 வயதில் பணி ஓய்வு பெற வேண்டும். ஆனால், மத்திய அரசின் மருத்துவர்கள் மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 65 ஆக இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி, சில மாநிலங்களில் ஓய்வு பெரும் வயது 62 ஆக இருந்து வருகிறது. இதனால், மத்திய அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு
 

மத்திய அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு பெரும் வயதைக் குறைப்பதற்கான முடிவில் மத்திய அரசு ஈடுபட்டது. 

மத்திய அரசு ஊழியர்கள் 60 வயதில் பணி ஓய்வு பெற வேண்டும். ஆனால், மத்திய அரசின் மருத்துவர்கள் மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 65 ஆக இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி, சில மாநிலங்களில் ஓய்வு பெரும் வயது 62 ஆக இருந்து வருகிறது. இதனால், மத்திய அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு பெரும் வயதைக் குறைப்பதற்கான முடிவில் மத்திய அரசு ஈடுபட்டது. 

அதன் படி, பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை பரிந்துரையின் பேரில் அரசு ஊழியர்கள் இனி 33 ஆண்டு பணிக்காலம் அல்லது 60 வயதில் பணி ஓய்வு பெற வேண்டும். அதாவது, இதில் எது முதலில் வருகிறதோ அதில் ஓய்வு பெற வேண்டும். இந்த முடிவு 1.4.2020 முதல் அமலுக்கு வரும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், ஓரளவுக்கு வேலையின்மை கட்டுக்குள் வரும் என்றும் பணியில் இருக்கும் அதிகாரிகளுக்கு விரைவாகப் பதவி உயர்வு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.