×

மது இல்லாமல் தவித்த குடிமகன்களுக்கு “இலவசமாக” மது கொடுத்த இளைஞர்!

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் எந்த மதுபான கடைகளும் செயல்படாது என்று அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் எந்த மதுபான கடைகளும் செயல்படாது என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பது பெருகி வரும் நிலையில், பல பகுதிகளில் உள்ள குடிமகன்கள் டாஸ்மாக் கடைகள் இல்லாமல் திணறி வருகின்றனர். மது இல்லாமல் முடங்கி கிடக்கும் குடிமகன்கள், டாஸ்மாக் கடைகளுள் புகுந்து திருடும் அளவிற்கு வந்து விட்டது. அதுமட்டுமில்லாமல் மது கிடைக்காத
 

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் எந்த மதுபான கடைகளும் செயல்படாது என்று அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் எந்த மதுபான கடைகளும் செயல்படாது என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பது பெருகி வரும் நிலையில், பல பகுதிகளில் உள்ள குடிமகன்கள் டாஸ்மாக் கடைகள் இல்லாமல் திணறி வருகின்றனர். மது இல்லாமல் முடங்கி கிடக்கும் குடிமகன்கள், டாஸ்மாக் கடைகளுள் புகுந்து திருடும் அளவிற்கு வந்து விட்டது. அதுமட்டுமில்லாமல் மது கிடைக்காத விரக்தியில் சிலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகிறது. 

இந்நிலையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தான் வைத்திருந்த மதுவை சாலையில் அமர்ந்திருந்த மக்களுக்கு இலவசமாக கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து பேசிய அந்த இளைஞர், தான் வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பும் போது ஒரு பெண் மது இல்லாமல் கத்திக் கொண்டிருந்ததாகவும், பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் கூறினார். மேலும், இந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்ததால் வீட்டில் வைத்திருந்த மதுவை கொண்டு வந்து கொடுத்தேன் என்று கூறினார். இந்த சம்பவம் தற்போது வைரல் ஆகி வருகிறது.