×

மணமகன் கழுத்தில் தாலி கட்டிய மணமகள்: பழமையை உடைத்த சமத்துவ திருமணம்!

திருமணத்தில் மணமகன்- மணமகள் இருவரும் தாலி கட்டிக்கொள்ளும் சமத்துவத் திருமணம் ஒன்று கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது. கர்நாடகா: திருமணத்தில் மணமகன்- மணமகள் இருவரும் தாலி கட்டிக்கொள்ளும் சமத்துவத் திருமணம் ஒன்று கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது. தாலி கட்டும் வழக்கம் திருமணத்தில் தாலி கட்டும் வழக்கம் என்பது ஆண்களுக்கான உரிமையாகவே பார்க்கப்படுகிறது. பெண்களுக்குத் தாலி கட்டுவது என்பது அவள் திருமணமானவள் என்பதை இந்த சமூகத்திற்கு அடையாளம் காட்டவே நடத்தப்படும் ஒரு பழக்கமாகும். ஆனால் கர்நாடகாவில் நடந்த ஒரு திருமணத்தில் புதுவித முயற்சி
 

திருமணத்தில் மணமகன்- மணமகள் இருவரும் தாலி கட்டிக்கொள்ளும் சமத்துவத் திருமணம் ஒன்று கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது.

கர்நாடகா: திருமணத்தில் மணமகன்- மணமகள் இருவரும் தாலி கட்டிக்கொள்ளும் சமத்துவத் திருமணம் ஒன்று கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது.

தாலி கட்டும் வழக்கம்

திருமணத்தில் தாலி கட்டும் வழக்கம் என்பது ஆண்களுக்கான உரிமையாகவே பார்க்கப்படுகிறது. பெண்களுக்குத் தாலி  கட்டுவது என்பது அவள் திருமணமானவள் என்பதை இந்த சமூகத்திற்கு அடையாளம் காட்டவே நடத்தப்படும் ஒரு  பழக்கமாகும். ஆனால் கர்நாடகாவில் நடந்த ஒரு திருமணத்தில் புதுவித முயற்சி ஒன்று அரங்கேறியுள்ளது.

 மணமகள் தாலி கட்டிய வினோதம் 

கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில்,  ஐடி பொறியாளர்களான அமித்-  பிரியா திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். மணமகன் அமித், லிங்காயத் சமூகத்தையும், மணமகள் பிரியா   குருபா சமுதாயத்தையும் சேர்ந்தவர் ஆவர்.  இதையடுத்து 12-ம் நூற்றாண்டின் லிங்காயத் சமூக அடையாளமான பசவண்ணாவின் சிலையில் முன்னால்  அதில் மங்கள வாத்தியங்கள் முழங்கப் பிரியா, அமித்தின் கழுத்தில் தாலி கட்டினார். அதே போல் அமித்தும் பிரியா கழுத்தில் தாலி கட்டினார்.

சமத்துவத் திருமணம்

முன்னதாக  இருவேறு சமூகத்தைச் சேர்ந்த  பிரபுராஜ் – அங்கிதா ஜோடியும் இதே போல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த இரண்டு திருமணங்களிலும் ஏராளமான உறவினர்களும் நண்பர்களும்  கலந்துகொண்டனர்.

திருமணம் என்றாலே ஆண்கள் தான்  தாலி  கட்ட வேண்டும் என்ற நடைமுறையை மாற்றி பெண்கள் ஆண்களுக்குத் தாலி கட்டியுள்ள இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.