×

மசூதியில் பிரேத பரிசோதனை செய்ய அனுமதி தந்த இஸ்லாமிய அமைப்பு: பேருந்து நிலையத்தில் தொழுகை செய்த நெகிழ்ச்சி!

கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை அங்குள்ள மசூதியில் நடந்ததால் இஸ்லாமியர்கள் பேருந்து நிலையத்தில் தொழுகை நடத்தினர். கேரளா: கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை அங்குள்ள மசூதியில் நடந்ததால் இஸ்லாமியர்கள் பேருந்து நிலையத்தில் தொழுகை நடத்தினர். கேரளாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த கனமழையால் கேரளாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது 104ஆக உயர்ந்துள்ளது. மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கவலப்பரா பொத்துக்கல்லுவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 60-க்கும் மேற்பட்டோர்
 

கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை அங்குள்ள மசூதியில் நடந்ததால் இஸ்லாமியர்கள் பேருந்து நிலையத்தில் தொழுகை நடத்தினர். 

கேரளா: கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை அங்குள்ள மசூதியில் நடந்ததால் இஸ்லாமியர்கள் பேருந்து நிலையத்தில் தொழுகை நடத்தினர். 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆங்காங்கே  நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த கனமழையால் கேரளாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது 104ஆக உயர்ந்துள்ளது. மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கவலப்பரா பொத்துக்கல்லுவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

இதனால் நிலச்சரிவில் சிக்கியவர்களின்  உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. அவர்களின் உடல்களை  நீலாம்பூர் தாலுகா மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்ட நிலையில் அது   40 கி.மீ தூரத்தில் இருப்பதால் அந்த முடிவு கைவிடப்பட்டது. பெரிய விலாசமான இடம் கிடைத்தால் பிரேதப்பரிசோதனை செய்யலாம் என மருத்துவர்கள்  தெரிவித்தனர். 

இந்நிலையில் உள்ளூர் மஜித் அல் முஜாஹிதின் கமிட்டி என்ற இஸ்லாமிய அமைப்பு, பிரேதப்பரிசோதனை செய்ய மசூதியை வழங்க முன் வந்தனர். இதையடுத்து அங்கு பிரேதப் பரிசோதனை நடந்தது. இதனால் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால்  வழக்கமாக நடத்தப்படும் தொழுகையை, இஸ்லாமியர்கள் உள்ளூர் பேருந்து நிலையத்தில் நடத்தினர். இதில் ஏராளமான பெண்களும் கலந்துகொண்டனர். இது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.