×

மக்களவை தேர்தலில் பாஜக 264 இடங்களை கைப்பற்றும்: பிரபல செய்தி நிறுவனம் வெளியிட்ட கருத்து கணிப்பு!

2019 மக்களவை தேர்தலில் பாஜகக் கூட்டணி 264 இடங்களை பிடிக்கும் என ஏபிபி சி-வோட்டர் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. புதுடெல்லி: 2019 மக்களவை தேர்தலில் பாஜகக் கூட்டணி 264 இடங்களை பிடிக்கும் என ஏபிபி சி-வோட்டர் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையத் தலைவர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி துவங்குகிறது. 20 மாநிலங்களைச் சேர்ந்த 91 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது.
 

2019 மக்களவை தேர்தலில் பாஜகக் கூட்டணி 264 இடங்களை பிடிக்கும் என ஏபிபி சி-வோட்டர் கருத்துக்கணிப்பு  தெரிவித்துள்ளது.

புதுடெல்லி: 2019 மக்களவை தேர்தலில் பாஜகக் கூட்டணி 264 இடங்களை பிடிக்கும் என ஏபிபி சி-வோட்டர் கருத்துக்கணிப்பு  தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையத் தலைவர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி துவங்குகிறது. 20 மாநிலங்களைச் சேர்ந்த 91 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தமிழகமும் இடம்பிடித்துள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடைபெறுகிறது

இந்நிலையில், ஏபிபி சி-வோட்டர் மக்களவை தேர்தலுக்கான கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.  அதன்படி வரும் மக்களவை தேர்தலில் மொத்தம் உள்ள 543 இடங்களில் பாஜகக் கூட்டணி 264 இடங்களும், காங்கிரஸ் கூட்டணி 141 இடங்களும், மற்றவர்கள் 138 இடங்களும் வெல்ல வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு :-

பீகார் (மொத்தம் 40 தொகுதி )
பாஜக கூட்டணி – 36
காங்கிரஸ் கூட்டணி –  4 

உத்திரபிரதேசம்  (மொத்தம் உள்ள 80 தொகுதி)
மாயாவதி-அகிலேஷ் கூட்டணிக்கு 47
பாஜக கூட்டணி 29 
காங்கிரஸ் கட்சி 4 

மகாராஷ்டிரா (மொத்தம் உள்ள 48 தொகுதி) 
பாஜக கூட்டணி 35 
காங்கிரஸ் கூட்டணி  13  

மேற்கு வங்காளம்  (மொத்தம் உள்ள 42 தொகுதி) 
பாஜக கூட்டணி – 8
திரிணாமுல் காங்கிரஸ் – 34 

ஒடிசா  (மொத்தம் உள்ள 21 தொகுதி) 
பாஜக -12 
பிஜூ ஜனதா தளம் கட்சி – 9

ஜார்க்கண்ட்  (மொத்தம் உள்ள 21 தொகுதி) 
பாஜக – 3
காங்கிரஸ் கூட்டணி – 10 
ஜேவிஎம் கட்சி – 1

சத்தீஸ்கர்  (மொத்தம் உள்ள 11 தொகுதி) 
பாஜக கூட்டணி – 6
காங்கிரஸ் கூட்டணி – 5

ராஜஸ்தான்  (மொத்தம் உள்ள 25 தொகுதி) 
பாஜக கூட்டணி – 20
காங்கிரஸ்-  5

டெல்லி (மொத்தம் உள்ள 7 தொகுதி) 
பாஜக – 7 

பஞ்சாப்  (மொத்தம் உள்ள 13தொகுதி) 
காங்கிரஸ் கூட்டணி – 12
 பாஜக – 1

ஹரியானா (மொத்தம் உள்ள 10 தொகுதி) 
பாஜக கூட்டணி – 7
காங்கிரஸ் கூட்டணி – 3

உத்தரகண்ட் மற்றும் இமாச்சல் பிரதேஷ் மாநிலத்திலுள்ள அனைத்து தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் என இந்தக் கருத்துக்கணிப்பில் மூலம் தெரியவந்துள்ளது