×

மகிந்திரா நிறுவன கேண்டீன்களில் தட்டுகளுக்கு பதிலாக வாழை இலைகளில் உணவு….. நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகும் ஆனந்த் மகிந்திராவின் மதிப்பு..

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறிய ஆலோசனை ஏற்று தனது நிறுவன கேண்டீன்களில் தொழிலாளர்களுக்கு தட்டுகளுக்கு பதிலாக வாழை இலைகளில் உணவு வழங்கப்படுவதாக ஆனந்த் மகிந்திரா தெரிவித்தார். மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்யமான மகிந்திரா குழுமத்தை கட்டி காக்கும் ஆனந்த் மகிந்திரா மிகவும் வித்தியாசமானவர் மற்றும் மிகவும் மனிதநேயம் கொண்ட நல்ல மனிதர். எவ்வளவு பணிகள் இருந்தாலும் டிவிட்டரில் மிகவும் பரபரப்பாக இருப்பவர். தன்னை பின்தொடருபவர்கள் கூறும் எந்தவொரு ஆலோசனைகளையும் சிறிது அளவும் ஈகோ
 

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறிய ஆலோசனை ஏற்று தனது நிறுவன கேண்டீன்களில் தொழிலாளர்களுக்கு தட்டுகளுக்கு பதிலாக வாழை இலைகளில் உணவு வழங்கப்படுவதாக ஆனந்த் மகிந்திரா தெரிவித்தார்.

மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்யமான மகிந்திரா குழுமத்தை கட்டி காக்கும் ஆனந்த் மகிந்திரா மிகவும் வித்தியாசமானவர் மற்றும் மிகவும் மனிதநேயம் கொண்ட நல்ல மனிதர். எவ்வளவு பணிகள் இருந்தாலும் டிவிட்டரில் மிகவும் பரபரப்பாக இருப்பவர். தன்னை பின்தொடருபவர்கள் கூறும் எந்தவொரு ஆலோசனைகளையும் சிறிது அளவும் ஈகோ இல்லாமல் ஏற்று கொள்பவர். மேலும் தன்னை ஆச்சரியப்படுத்திய தகவல்களையும் தவறாமல் டிவிட்டரில் பதிவு செய்து விடுவார். இதனால் இவருக்கு என்றே டிவிட்டரில் தனி ரசிகர்கள் உள்ளனர்.

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தனது நிறுவன ஆலைகளின் கேண்டீன்களில் தொழிலாளர்களுக்கு தட்டுகளுக்கு பதிலாக வாழை இலைகளில் உணவு வழங்கப்படுவதாக ஆனந்த் மகிந்திரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆனந்த் மகிந்திரா தனது டிவிட்டரில், வாழை விவசாயிகள் தங்களது உற்பத்தியை விற்பனை செய்வதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். அதனால் உங்கள் ஆலைகளில் உள்ள கேண்டீகளில் தட்டுகளுக்கு பதிலாக வாழை இலைகளை பயன்படுத்தினால் அவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என ஓய்வு பெற்ற பத்திரிகையாளர் பத்மா ராம்நாத் எனக்கு மெயில் அனுப்பி இருந்தார்.

எனது செயல்திறன் மிக்க தொழிற்சாலை குழுக்கள் உடனடியாக இந்த திட்டத்தை செயல்படுத்தின. நன்றி என பதிவு செய்து இருந்தார். மேலும் தனது ஆலைகளின் கேண்டீன்களில் தொழிலாளர்கள் வாழை இலைகளில் சாப்பிடும்  படத்தையும் பதிவு செய்து இருந்தார். ஆனந்த் மகிந்திரா டிவிட் செய்த பதிவை ஒரு மணி நேரத்துக்குள் 13 ஆயிரத்தும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். மேலும் மகிந்திராவை பாராட்டி தள்ளியுள்ளனர்.