×

மகனை அணைத்தபடி நிலச்சரிவில் உயிரிழந்த தாய்: கேரளாவில் கலங்கவைக்கும் சம்பவம்!

கேரளாவில் மட்டும் சுமார் 72 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக வயநாட்டில் நிலச்சரிவால் 59 பேர் புதையுண்டுள்ளனர். கேரளா: தனது ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடி நிலச்சரிவில் தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் மேற்கு பருவமழையால் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாதிக்கப்பட்டு சுமார் 169 பேர் பலியாகியுள்ளனர். இதில் கேரளாவில் மட்டும் சுமார் 72 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக வயநாட்டில் நிலச்சரிவால் 59 பேர் புதையுண்டுள்ளனர். அவர்களைத் தேடும் பணியை மீட்பு
 

கேரளாவில் மட்டும் சுமார்  72 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக வயநாட்டில் நிலச்சரிவால் 59 பேர் புதையுண்டுள்ளனர்.

கேரளா: தனது ஒரு வயது மகனை மார்போடு  அணைத்தபடி நிலச்சரிவில் தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தென் மேற்கு பருவமழையால் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாதிக்கப்பட்டு சுமார்  169 பேர் பலியாகியுள்ளனர். இதில் கேரளாவில் மட்டும் சுமார்  72 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக வயநாட்டில் நிலச்சரிவால் 59 பேர் புதையுண்டுள்ளனர். அவர்களைத்  தேடும் பணியை மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் மலப்புரம் அருகேயுள்ள கொட்டக்கண்ணு, சாத்தக்குளம் பகுதிகளில் நேற்று மீட்பு பணிகள் நடந்தன. அப்போது கீது என்ற இளம்பெண் தனது ஒருவயதுக் குழந்தை துருவனை மார்போடு அணைத்தபடி உயிரிழந்து கிடந்தது அங்கிருந்தவர்களைக் கண்கலங்கச் செய்தது.

இந்த நிலச்சரிவில் கீதுவின் கணவர் சரத் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இருப்பினும்  சரத்தின் தாய் உள்ளிட்ட சிலர் இறந்துள்ளனர். அவர்களின் உடல்களை மீட்புப்படையினர் தீவிரமாகத் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.