×

ப்ரெஷர் குக்கர் சமையல்… மூளைக்குள் நுழைந்த குக்கர் விசில்! பார்வையிழந்த பெண்!

விஞ்ஞானத்தின் வளர்ச்சி எந்த அளவிற்கு மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதோ அதே போல், அந்த வளர்ச்சியை முறையாக பயன்படுத்தாவிட்டால், இருபக்கங்களிலும் பிடி இல்லாத கத்தியைப் போன்று சமயங்களில் பயன்படுத்துபவர்களையும் பதம் பார்த்து விடுகிறது. விஞ்ஞானத்தின் வளர்ச்சி எந்த அளவிற்கு மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதோ அதே போல், அந்த வளர்ச்சியை முறையாக பயன்படுத்தாவிட்டால், இருபக்கங்களிலும் பிடி இல்லாத கத்தியைப் போன்று சமயங்களில் பயன்படுத்துபவர்களையும் பதம் பார்த்து விடுகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் அப்படியானதொரு சம்பவத்தால் சமையல் செய்துக் கொண்டிருந்த பெண் ஒருவர்,
 

விஞ்ஞானத்தின் வளர்ச்சி எந்த அளவிற்கு மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதோ அதே போல், அந்த வளர்ச்சியை முறையாக பயன்படுத்தாவிட்டால், இருபக்கங்களிலும் பிடி இல்லாத கத்தியைப் போன்று சமயங்களில் பயன்படுத்துபவர்களையும் பதம் பார்த்து விடுகிறது. 

விஞ்ஞானத்தின் வளர்ச்சி எந்த அளவிற்கு மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதோ அதே போல், அந்த வளர்ச்சியை முறையாக பயன்படுத்தாவிட்டால், இருபக்கங்களிலும் பிடி இல்லாத கத்தியைப் போன்று சமயங்களில் பயன்படுத்துபவர்களையும் பதம் பார்த்து விடுகிறது. 
ஜார்கண்ட் மாநிலத்தில் அப்படியானதொரு சம்பவத்தால் சமையல் செய்துக் கொண்டிருந்த பெண் ஒருவர், தனது கண்பார்வையை இழந்துள்ளார். சமையலறையில், அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்த அந்த பெண், குக்கரில் பருப்பை வைத்து விட்டு வீட்டின் பின்புறத்தில் உள்ள அவரது தோட்டத்திற்கு சென்றுள்ளார். பருப்பு வெந்து முடித்ததும், குக்கர் பலமுறை விசில் சப்தம் எழுப்பியது அவருக்கு கேட்கவில்லை. தொடர்ச்சியாக சப்தம் எழுப்பியபடியே உள்ளுக்குள் ப்ரெஷரைச் சேர்த்து வைத்துள்ளது குக்கர். நீண்ட நேரம் கழித்து, சமையலறைக்கு வந்த பெண்மணி, அடுப்பில் குக்கர் இருந்ததை கவனித்து அடுப்பை அணைத்து விட்டு, குக்கரை கீழே எடுத்து வைத்துள்ளார்.  

அப்போது அழுத்தம் தாங்காமல், எதிர்பாராத விதமாக குக்கரில் இருந்து விசில் பறந்து, பெண்ணின் இடது கண்ணைத் தாக்கி, கண்களுக்குள் புகுந்து விட்டது. மருத்துவமனையில் அந்த பெண்ணைச் சேர்த்து விட்டு, அவரது தலையை ஸ்கேன் செய்து பார்த்த போது, குக்கரின் விசில் அவரது கண்களை துளைத்து, மூளைக்கு நடுவே இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மருத்துவர்கள் அந்த விசிலை பெண்ணின் தலையில் இருந்து பத்திரமாக மீட்டு எடுத்தனர். எனினும் அந்த பெண்ணுக்கு இடது கண் பார்வை பறிபோய்விட்டது!