×

போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்காக போலீஸ் நிலையம் வந்த வழக்கறிஞரை கைது செய்த உ.பி போலீஸ்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர்கள் என்று கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக போலீஸ் நிலையம் வந்த வழக்கறிஞரை காவல்துறை கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .உத்தரப்பிரதேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சட்ட உதவி செய்வதற்காக உ.பி மாநிலம் ஷாம்லி காவல் நிலையத்துக்கு வழக்கறிஞர் முகமது பைசல் (24) என்பவர் வந்துள்ளார். போலீஸ் நிலையம் வந்த வழக்கறிஞர் பைசலுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்
 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர்கள் என்று கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக போலீஸ் நிலையம் வந்த வழக்கறிஞரை காவல்துறை கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

.உத்தரப்பிரதேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சட்ட உதவி செய்வதற்காக உ.பி மாநிலம் ஷாம்லி காவல் நிலையத்துக்கு வழக்கறிஞர் முகமது பைசல் (24) என்பவர் வந்துள்ளார். போலீஸ் நிலையம் வந்த வழக்கறிஞர் பைசலுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்று கூறி அவரை போலீசார் கைது செய்தனர்.

இந்திய மக்கள் முன்னணியின் முஸ்லிம் முன்னணியில் பைசல் உறுப்பினராக உள்ளதாகவும் வன்முறையைத் தூண்டியதாகவும், ஆட்சேபனைக்குரிய துண்டுபிரசுரங்களை விநியோகித்ததாகவும் போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர். அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீசின் இந்த குற்றச்சாட்டுகளை பைசல் உறவினர்கள் மறுத்துள்ளனர். “குறிப்பிட்ட அமைப்பில் பைசல் உறுப்பினர் கிடையாது. அந்த அமைப்போடு எந்த ஒரு தொடர்பும் கொண்டது இல்லை. இது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தலையிட வேண்டும்” என்று பைசலின் தந்தை முகமது ஹனீபா தெரிவித்துள்ளார்.

பைசல் கடந்த மூன்று ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். மனித உரிமைகள் அமைப்பின் தேசிய கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ளார் என்று வழக்கறிஞர் அன்சார் இத்தோரி கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் தலையிடும்படி தேசிய மனித உரிமை ஆணையத்தையும், பார் அசோசியேஷனையும் வலியுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.