×

போன் செய்தால் இலவச சாப்பாடு… கலக்கும் கேரளா!

உலகில் பசியால் வாடும் மக்கள் நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முக்கிய இடம் உண்டு. இந்த ஆண்டு எடுக்கப்பட்ட கணிப்பின்படி பட்டியலில் இந்தியா பாகிஸ்தான், இலங்கை நாடுகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளி வறுமையில் தள்ளாடி நிற்கிறது. உலகில் பசியால் வாடும் மக்கள் நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முக்கிய இடம் உண்டு. இந்த ஆண்டு எடுக்கப்பட்ட கணிப்பின்படி பட்டியலில் இந்தியா பாகிஸ்தான், இலங்கை நாடுகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளி வறுமையில் தள்ளாடி நிற்கிறது. ஆனால், இந்தியாவில் கேரள
 

உலகில் பசியால் வாடும் மக்கள் நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முக்கிய இடம் உண்டு. இந்த ஆண்டு எடுக்கப்பட்ட கணிப்பின்படி பட்டியலில் இந்தியா பாகிஸ்தான், இலங்கை நாடுகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளி வறுமையில் தள்ளாடி நிற்கிறது.

உலகில் பசியால் வாடும் மக்கள் நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முக்கிய இடம் உண்டு. இந்த ஆண்டு எடுக்கப்பட்ட கணிப்பின்படி பட்டியலில் இந்தியா பாகிஸ்தான், இலங்கை நாடுகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளி வறுமையில் தள்ளாடி நிற்கிறது. ஆனால், இந்தியாவில் கேரள மாநிலத்தில் தான் பசியால் வாடும் மக்கள் குறைவாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரள அரசு மட்டுமல்லாமல்,  தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் கேரளாவில் பசியைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதே இதற்கு காரணமாக உள்ளது. இந்நிலையில், கேரள மீனவர் மேம்பாட்டு அமைப்பு, `பசிக்கு விடை ‘ என்ற பெயரில் திட்டத்தை அறிமுகப்படுத்தி நடத்தி வருகிறது.

இந்தத் திட்டத்தின்படி, உணவுப் பொட்டலங்களுடன் ஆட்டோ ஒன்று நகரைச் சுற்றி வரும். பசியால் யார் கை நீட்டினாலும், அவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படும். ஓர் உணவுப் பொட்டலத்தில் இரண்டு வேளை சாப்பிடும் அளவுக்கு உணவு இருக்கும். சைவம் மட்டுமல்ல, அசைவ உணவுகளும் கேட்பவர்களுக்கு வழங்கப்படும். சாலையில் வசிப்போர், பிச்சை எடுப்பவர்கள் என யார் வேண்டுமானாலும் உணவுப் பொட்டலங்களை வாங்கிச் சாப்பிடலாம். பசித்த வயிற்றுடன் மக்கள் இருக்கக் கூடாது என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம். நகரிலிருந்து 25 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் பசியால் யார் போன் செய்தாலும் அவர்களைத் தேடி உணவுப் பொட்டலங்களைக் கொண்டு போய் சேர்க்கும்.