×

போதையில் வந்த மணமகன்: திருமணத்தை நிறுத்திய தந்தை!

குடித்து விட்டு மணமகன் மணமேடையில் உளறியதால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார் திருமணத்தைப் பாதியில் நிறுத்தினர். பீகார்: குடித்து விட்டு மணமகன் மணமேடையில் உளறியதால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார் திருமணத்தைப் பாதியில் நிறுத்தினர். கடந்த பீகார் சட்டப் பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆட்சிக்கு வந்தால் மாநிலம் முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தப்படுத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், வாக்குறுதி அளித்தார். இதன்படி உள்நாட்டுத் தயாரிப்பு மதுபானம், மசாலா மதுபானம் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டது. இப்படி பூரண மதுவிலக்கு அமலில் உள்ள
 

குடித்து விட்டு மணமகன் மணமேடையில் உளறியதால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார் திருமணத்தைப் பாதியில் நிறுத்தினர்.

பீகார்: குடித்து விட்டு மணமகன் மணமேடையில் உளறியதால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார் திருமணத்தைப் பாதியில் நிறுத்தினர்.

கடந்த  பீகார் சட்டப் பேரவைத் தேர்தல்  பிரச்சாரத்தின்போது ஆட்சிக்கு வந்தால் மாநிலம் முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தப்படுத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், வாக்குறுதி அளித்தார். இதன்படி உள்நாட்டுத் தயாரிப்பு மதுபானம், மசாலா மதுபானம் ஆகியவற்றுக்குத்  தடை விதிக்கப்பட்டது.

இப்படி பூரண மதுவிலக்கு அமலில் உள்ள பீகார் மாநிலத்தின் சாப்ரா பகுதியில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெறவிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில், திருமண நாளில்  மணமகன் குடிபோதையில் மணமேடையில் அமர்ந்திருந்தார். இதனைக் கண்ட பெண்வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது தான் முழுமையான குடிகாரன் என மணமகன் உளறிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை, குடிகார மணமகனுக்கு தனது பெண்ணைத் தருவதில் விருப்பமில்லை என்று கூறி திருமணத்தை நிறுத்தினார். இதையடுத்து திருமணத்திற்காகக் கொண்டுவரப்பட்ட சீர் வரிசைப் பொருட்களைப் பெண் வீட்டார் எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.