×

பேயைக் காட்டிட்டு பணம் வாங்கிக்கோ ! கலெக்டர் கெடுபிடி !

பேய்கள் இருப்பதாக யாராவது நிரூபித்தால் 50,000 ரூபாய் தருவதாக அதிரடியாக அறிவித்துள்ளார் ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு ஆட்சியர். மனிதன் தோன்றியது முதலே இருக்கும் அதீத நம்பிக்கை கடவுள். அதற்கு அடுத்தபடியாக பேய். கடவுளுக்கு பயப்படாதவன் கூட பேய்க்கு நிச்சயம் பயப்படுவான். பேய்கள் இருப்பதாக யாராவது நிரூபித்தால் 50,000 ரூபாய் தருவதாக அதிரடியாக அறிவித்துள்ளார் ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு ஆட்சியர். மனிதன் தோன்றியது முதலே இருக்கும் அதீத நம்பிக்கை கடவுள். அதற்கு அடுத்தபடியாக பேய். கடவுளுக்கு
 

பேய்கள் இருப்பதாக யாராவது நிரூபித்தால் 50,000 ரூபாய் தருவதாக அதிரடியாக அறிவித்துள்ளார் ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு ஆட்சியர்.
மனிதன் தோன்றியது முதலே இருக்கும் அதீத நம்பிக்கை கடவுள். அதற்கு அடுத்தபடியாக பேய்.
கடவுளுக்கு பயப்படாதவன் கூட பேய்க்கு நிச்சயம் பயப்படுவான்.

பேய்கள் இருப்பதாக யாராவது நிரூபித்தால் 50,000 ரூபாய் தருவதாக அதிரடியாக அறிவித்துள்ளார் ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு ஆட்சியர்.
மனிதன் தோன்றியது முதலே இருக்கும் அதீத நம்பிக்கை கடவுள். அதற்கு அடுத்தபடியாக பேய்.
கடவுளுக்கு பயப்படாதவன் கூட பேய்க்கு நிச்சயம் பயப்படுவான். அதற்குக் காரணம் பேய், பிசாசை மையமாக வைத்து வெளியாகும் திரைப்படங்கள்தான். நள்ளிரவில் நடந்து செல்லும்போது புளியமரத்தில் ஒரு வெள்ளை வேஷ்டி தொங்கினால் கூட பேய்தான் என பயப்படும் அளவுக்கு மனிதர்கள் மாறிவிட்டனர்.

இதில் ஒருபடி மேலேயே பெண்கள் தங்களுக்கு உடல்நலம் பாதித்தால் பேய் பிடித்திருக்கிறது என நினைத்து மருத்துவமனை செல்லாமல் மந்திரவாதிகளிடம் சென்று ஏமாந்து விடுகின்றனர். படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரன், கோடீஸ்வரன் வளர்ந்த நாடு, வளராத நாடு என எதுவும் இதற்கு விதிவிலக்கல்ல.

ஒடிசா மாநிலம் கஞ்சாம் மாவட்டத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டால் மருத்துவமனைக்கு செல்லாமல் மாந்திரீகம், பில்லி சூனியம், ஆவிகள்தான் காரணம் எனகருதி மந்திரவாதிகளிடம் செல்கின்றனர். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் மந்திரவாதிகள் பணம் பறிக்கின்றனர். இதனால் மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தே போகின்றனர். இதை கட்டுப்படுத்த ஆட்சியர் ஒரு முடிவு எடுத்தார். என்னதான் பேய்கள் குறித்து பிரச்சாரம் செய்தாலும் இவர்கள் திருந்த போவதில்லை. எனவே புதிய யுக்தியை கையாண்டார். 

பேய் இருப்பதை யாராவது நிரூபித்தால் அவர்களுக்கு உடனே ரூ.50,000 தருகிறேன் என ஆட்சியர் கூறியுள்ளார். பேய் என்பது மூட நம்பிக்கை என்பதை மக்கள் உணரவேண்டும் என்பதற்காக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டார் ஆட்சியர். அது இருக்கட்டும். ஒருவேளை யாருக்காவது பேய் என பெயர் வைத்திருந்து அவரை அழைத்து வந்து இவர்தான் பேய். பேயை காமித்துவிட்டேன் பணம் கொடுங்கள் என ஆட்சியரிடம் கேட்டால் என்ன செய்வார்?