×

பெற்றோர் சம்பாதியத்தில் சோறா? இல்லை சொரணையா? டெல்லி கோர்ட் அதிரடி தீர்ப்பு!

டெல்லியைச் சேர்ந்த வயதான தம்பதிகள், தங்களின் 2 மகன்களும் அவர்களின் மனைவிகளுடன் தங்களோடு வசிப்பதால் தங்களுக்கு சிரமமாக இருப்பதால், அவர்களை வீட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் எனக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். டெல்லியைச் சேர்ந்த வயதான தம்பதிகள், தங்களின் 2 மகன்களும் அவர்களின் மனைவிகளுடன் தங்களோடு வசிப்பதால் தங்களுக்கு சிரமமாக இருப்பதால், அவர்களை வீட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் எனக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சொத்தில் தங்களுக்கும் உரிமை உண்டு என பதில் மனு தாக்கல் செய்தனர் மகன்கள் இருவரின்
 

டெல்லியைச் சேர்ந்த வயதான தம்பதிகள், தங்களின் 2 மகன்களும் அவர்களின் மனைவிகளுடன் தங்களோடு வசிப்பதால் தங்களுக்கு சிரமமாக இருப்பதால், அவர்களை வீட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் எனக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

டெல்லியைச் சேர்ந்த வயதான தம்பதிகள், தங்களின் 2 மகன்களும் அவர்களின் மனைவிகளுடன் தங்களோடு வசிப்பதால் தங்களுக்கு சிரமமாக இருப்பதால், அவர்களை வீட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் எனக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சொத்தில் தங்களுக்கும் உரிமை உண்டு என பதில் மனு தாக்கல் செய்தனர் மகன்கள் இருவரின் மனுவை நிராகரித்த நீதிமன்றம், வீட்டைவிட்டு வெளியேறுமாறு தீர்ப்பளித்தது. தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு மகன் மேல்முறையீடு செய்தார். வீட்டை காலி செய்யும் கீழ்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரியும் கோரியிருந்தார்.

மனுமீதான விசாரணை முடிந்து நீதிபதி பிரதிபா ராணி அளித்த தீர்ப்பில், “பெற்றோர்கள் சுயமாக சம்பாதித்து கட்டிய வீட்டில், மகன் என்ற காரணத்துக்காக திருமணம் ஆகி இருந்தாலும் அல்லது திருமணம் ஆகாவிட்டாலும், அந்த வீட்டில், உரிமை கோர முடியாது.பெற்றோர்கள் அனுமதிக்கும் பட்சத்தில், அவர்களின் கருணையின் அடிப்படையில்தான் மகன், மகனின் குடும்பத்தினர் தங்கி இருக்க முடியும். அதிலும் பெற்றோர்களுக்கும், மகனுக்கும், இடையிலான உறவு சமூகமாக இருக்கும் வரைதான் அந்த வீட்டில் மகன் குடியிருக்க முடியும். பெற்றோர்களுக்கும், மகனுக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்படும்பட்சத்தில், பெற்றோர் வாழ்நாள் முழுவதும் மகனை சொந்த வீட்டில் தங்கவைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அந்த சுமையையும் சுமக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றுகூறி இரு மகன்களும் உடனடியாக பெற்றோர் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டார்.