×

பெரியார், இடுக்கி அணைகளுக்கு ஆபத்து! கேரள அரசின் அலட்சியப் போக்கு!

‘அடடா…. மழைடா! அடை மழைடா!’ என்று ‘பையா’ படத்தில் மழையில் நனைந்தப்படியே நடிகை தமன்னா இடுப்பை வளைத்து வளைத்து போட்ட ஆட்டத்திற்கு கார்த்திக் பாடுவாரே…. யெஸ்… அந்த பாடல் ஷூட் செய்த இடம் வாகமண். வருடத்தில் 90 சதவிகித நாட்களும் மழைச்சாரல் பெய்து வரும் இயற்கை எழில் கொஞ்சும் அதிசய சுற்றுலா தளம். தினமும் தொலைதூரங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வந்து செல்கிறார்கள். இந்த பகுதியில் மக்கள் ஆர்வமுடன் கண்டு களித்து வரும் தவளைப் பாறைகளை,
 
‘அடடா…. மழைடா! அடை மழைடா!’ என்று ‘பையா’ படத்தில் மழையில் நனைந்தப்படியே நடிகை தமன்னா இடுப்பை வளைத்து வளைத்து போட்ட ஆட்டத்திற்கு கார்த்திக் பாடுவாரே…. யெஸ்… அந்த பாடல் ஷூட் செய்த இடம் வாகமண். வருடத்தில் 90 சதவிகித நாட்களும் மழைச்சாரல் பெய்து வரும் இயற்கை எழில் கொஞ்சும் அதிசய சுற்றுலா தளம். தினமும் தொலைதூரங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வந்து செல்கிறார்கள். இந்த பகுதியில் மக்கள் ஆர்வமுடன் கண்டு களித்து வரும் தவளைப் பாறைகளை, வெடி வைத்து உடைத்தெடுக்க கேரள அரசு அனுமதி அளித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பகுதிகளில் சுமார் 64 ஏக்கர் பரப்பளவில் தவளைப் பாறைகள் உள்ளன. இந்த தவளைப் பாறையை வெடிகள் வைத்து உடைத்து எடுப்பதற்காக, முதல் கட்டமாக 36 ஏக்கருக்கு கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தப் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், மக்களின் நலனைக் கருதாமல் பாறைகளை உடைத்து எடுக்க கேரள அரசு அனுமதியளித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தவளைப் பாறைகளை வெடி வைத்து தகர்க்க கேரள அரசு அனுமதிப்பதால், முல்லை பெரியார் மற்றும் இடுக்கி அணைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதுடன், அந்த பகுதிகளில் இயற்கை வளங்களும் பெருமளவில் பாதிக்கப்படும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பாறைகளை உடைத்து எடுப்பதற்கு கேரள அரசு வழங்கிய அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கேரளா அரசுக்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.