×

பெங்களூருவில் நடைபெற்ற குதிரை ஓட்டப்பந்தயத்தில் தடம் சரியில்லாததால் விபத்து.. பணத்தை திரும்ப கேட்டு ரசிகர்கள் கலவரம்…!?

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் “2019- 20ம் ஆண்டுக்கான குளிர்கால குதிரைப்பந்தயம் இன்று பிற்பகல் தொடங்கியது. பிற்பகல் 2 மணி அளவில் முதல் பந்தயம் தொடங்கியது. ஏராளமான பார்வையாளர்கள் பந்தயத்தை பார்க்க வந்திருந்தார்கள். அதில் பலர் சில குதிரைகளின் மீது பந்தயம் கட்டி இருந்தனர். இந்த நிலையில் பந்தயம் தொடங்கிய சில நிமிடத்தில் மழையின் காரணமாக சேதமடைந்திருந்த தடத்தில், குதிரைகள் வேகமாக ஓட முடியாமல் ஒரு குதிரை வழுக்கி விழ பின்னால் வந்த இரண்டு குதிரைகளும் தொடர்ச்சியாக
 

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் “2019- 20ம் ஆண்டுக்கான குளிர்கால குதிரைப்பந்தயம் இன்று பிற்பகல் தொடங்கியது.  பிற்பகல் 2 மணி அளவில் முதல் பந்தயம் தொடங்கியது. ஏராளமான பார்வையாளர்கள் பந்தயத்தை பார்க்க வந்திருந்தார்கள். அதில் பலர் சில குதிரைகளின் மீது பந்தயம் கட்டி இருந்தனர். இந்த நிலையில் பந்தயம் தொடங்கிய சில நிமிடத்தில் மழையின் காரணமாக சேதமடைந்திருந்த தடத்தில், குதிரைகள் வேகமாக ஓட முடியாமல் ஒரு குதிரை வழுக்கி விழ பின்னால் வந்த இரண்டு குதிரைகளும் தொடர்ச்சியாக கீழே விழுந்தது.
 

இதனால் அந்த குதிரை மீது பந்தயம் கட்டி இருந்த பந்தயதாரர்கள் தங்களது பந்தய பணத்தை திரும்ப கொடுக்குமாறு குதிரைப்பந்தய கமிட்டிக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் திட்டமிட்டபடி பந்தயம் முடிந்துவிட்டதால் பணத்தை திருப்பித் தர இயலாது என கமிட்டி தெரிவித்து விட்டதால் ஆத்திரமடைந்த அவர்கள், ரேஸ் கோர்ஸ் வளாகத்தில் இருந்த அலுவலகத்தை அடித்து துவைத்து கலாட்டாவில் ஈடுபட்டனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது தொடர்ந்து அங்கு வந்த போலீசார் கலாட்டாவில் ஈடுபட்ட போது நபர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர். இதனால் இப்போட்டிக்கு பின்னர் நடைபெற இருந்த ஆறு பந்தயங்களும் ரத்து செய்யப்பட்டது..

allowfullscreen