×

பெங்களூருவில் 44,000 இடங்களில் காற்று தூய்மையாக்கும் இயந்திரங்கள் விரைவில்!

காற்று மாசை அளவிடும் முறையில் 2.5 மைக்ரான்கள் இருந்தால், மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இடமாக அறிவிக்கப்படும் நிலையில், 2030 ஆண்டுக்குள் 10 மைக்ரான் அளவுக்கு மாசளவு உச்சத்தை தொடும் என அஞ்சப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. பெங்களூருவில் மேலும் 500 இடங்களில் காற்று சுத்தப்படுத்தும் இயந்திரம் வைக்க பெங்களூர் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தினமும் கிட்டத்தட்ட 85 லட்சம் வாகனங்கள் கக்கும் புகையால் தோட்ட நகரமாக இருந்த பெங்களூரு காற்று மாசினால் அல்லாட துவங்கியபோதுதான், தலா இரண்டரை
 

காற்று மாசை அளவிடும் முறையில் 2.5 மைக்ரான்கள் இருந்தால், மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இடமாக அறிவிக்கப்படும் நிலையில், 2030 ஆண்டுக்குள் 10 மைக்ரான் அளவுக்கு மாசளவு உச்சத்தை தொடும் என அஞ்சப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.

பெங்களூருவில் மேலும் 500 இடங்களில் காற்று சுத்தப்படுத்தும் இயந்திரம் வைக்க பெங்களூர் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தினமும் கிட்டத்தட்ட 85 லட்சம் வாகனங்கள் கக்கும் புகையால் தோட்ட நகரமாக இருந்த பெங்களூரு காற்று மாசினால் அல்லாட துவங்கியபோதுதான், தலா இரண்டரை லட்சம் செலவில் பொது இடங்களில் காற்று சுத்தப்படுத்தும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டன. இதில் ஒரு நல்ல விஷயம் என்ன தெரியுமா? இந்த இயந்திரங்களை பொருத்துவது பெங்களூரு மாநகராட்சியோ அல்லது மாநில அரசோ அல்ல. கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி திட்டத்தின்கீழ் பெங்களூருவைச் சேர்ந்த காப்பரேட் நிறுவனம் அமைத்து கொடுத்திருக்கிறது.

ஆனால், இந்த ஒற்றை இயந்திரம் என்பது பெங்களூரு காற்று மாசுவுக்கு முன்னால் யானைப்பசிக்கு சோளப்பொரி. எனவே, பெங்களூரு மாநகரம் முழுவதும் 44,000 காற்று தூய்மைப்படுத்தும் இயந்திரங்கள் அமைக்கப்படவுள்ளன. காற்று மாசை அளவிடும் முறையில் 2.5 மைக்ரான்கள் இருந்தால், மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இடமாக அறிவிக்கப்படும் நிலையில், 2030 ஆண்டுக்குள் 10 மைக்ரான் அளவுக்கு மாசளவு உச்சத்தை தொடும் என அஞ்சப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. காற்று தூய்மையாக்கும் இயந்திரங்கள் வந்தபின் காக்கும் மருந்துகள். ஆனால், பெங்களூருவுக்கு உடனடி தேவை தடுப்பு மருந்துகள்தான். பெங்களூருவுக்கு தடுப்பு மருந்தா? எப்படி? பொதுப்போக்குவரத்தை அதிகப்படுத்துவதுதான் முக்கிய வழியாக இருக்கமுடியும்!