×

புதுச்சேரியில் வரும் பிப்.6 மற்றும் 7 ஆம் தேதி உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு !

புதுச்சேரியில் வரும் 6 மற்றும் 7 ஆம் தேதி உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக தமிழ்ச் சங்கத்தின் முக்கிய நோக்கம், தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் அவர்கள் வாழும் நாடுகளில் தமிழ் மொழியை வளர்ப்பதும், தமிழ்ப் பண்பாட்டைப் போற்றுவதும் தான். அந்த நோக்கிலே, உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அதில் தமிழர் விழாக்களை நடத்துவதோடு, இலக்கிய நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமில்லாமல், தமிழை வளர்க்கும் வகையில் பல
 

புதுச்சேரியில் வரும்  6 மற்றும் 7 ஆம் தேதி உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக தமிழ்ச் சங்கத்தின் முக்கிய நோக்கம், தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் அவர்கள் வாழும் நாடுகளில் தமிழ் மொழியை வளர்ப்பதும், தமிழ்ப் பண்பாட்டைப் போற்றுவதும் தான். அந்த நோக்கிலே, உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அதில் தமிழர் விழாக்களை நடத்துவதோடு, இலக்கிய நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன.  அதுமட்டுமில்லாமல், தமிழை வளர்க்கும் வகையில் பல எழுத்தாளர்கள் அவர்களின் படைப்புகள் மற்றும் மொழிபெயர்ப்புகளை அந்த மாநாட்டில் வெளியிடுவார்கள்.  உலகத் தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்தும் இந்த மாநாட்டினை வரும் மார்ச் 26 முதல் 30 வரை நடத்த மதுரை உலக தமிழ்ச் சங்கம் முடிவு செய்துள்ளது. 

இந்நிலையில் புதுச்சேரியில் வரும்  6 மற்றும் 7 ஆம் தேதி உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவை பல்கலைக்கழகம் மற்றும் கனடாவைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கமும் இணைந்து புதுச்சேரியில் இந்த இரண்டு நாட்களில் 14வது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு புதுவை பல்கலைக்கழகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த ஏராளமான தமிழறிஞர்கள் பங்கேற்று ஆய்வறிக்கைகளை சமர்ப்பிக்கின்றார்கள் இதற்காக 14 ஆய்வரங்குகள் அமைக்கப்படவுள்ளது. இது தவிர தொல்லியல் கண்காட்சியும் நடத்தப்படவுள்ளது.