×

புதிய உச்சத்தை தொட்ட சென்செக்ஸ்! முதலீட்டாளர்களை குஷிப்படுத்திய பங்கு வர்த்தகம்!

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சிறப்பாக இருந்தது. குறிப்பாக சென்செக்ஸ் இன்று புதிய உச்சத்தை தொட்டது. அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் முதலீட்டை குவித்து வருகின்றனர். சென்செக்ஸ் நிறுவன பட்டியலில் சில அதிரடி மாற்றங்கள் விரைவில் நிகழ உள்ளது. இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் பட்டைய கிளப்பியது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவன பங்குகளில்,
 

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சிறப்பாக இருந்தது. குறிப்பாக சென்செக்ஸ் இன்று புதிய உச்சத்தை தொட்டது.

அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் முதலீட்டை குவித்து வருகின்றனர். சென்செக்ஸ் நிறுவன பட்டியலில் சில அதிரடி மாற்றங்கள் விரைவில் நிகழ உள்ளது. இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் பட்டைய கிளப்பியது.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவன பங்குகளில், பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல், இண்டஸ்இந்த் பேங்க், ஆக்சிஸ் வங்கி, எச்.டி.எப்.சி. நிறுவனம், மாருதி மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்பட 28 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், யெஸ் பேங்க் மற்றும் ஓ.என்.ஜி.சி. ஆகிய 2 நிறுவன பங்குகளின் விலை மட்டும் குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,417 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,083 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 207 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. பங்கு வர்த்தகம் முடிவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.154.55 லட்சம் கோடியாக இருந்தது. 

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 529.82 புள்ளிகள் உயர்ந்து 40,889.23 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 164.60 புள்ளிகள் ஏற்றம் கண்டு 12,079.00 புள்ளிகளில் முடிவுற்றது.