×

பீகாரில் லஞ்சம் தர மறுத்த லாரி ஓட்டுனர் மீது தாக்குதல் – 3 போலீசார் கைது

பீகார் மாநிலத்தில் லஞ்சம் தர மறுத்த லாரி ஓட்டுனரை தாக்கியதால் 3 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். பாட்னா: பீகார் மாநிலத்தில் லஞ்சம் தர மறுத்த லாரி ஓட்டுனரை தாக்கியதால் 3 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 723 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை நாட்டில் 66 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். மேலும் நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்கிலும் ஏப்ரல் 14-ஆம் தேதி
 

பீகார் மாநிலத்தில் லஞ்சம் தர மறுத்த லாரி ஓட்டுனரை தாக்கியதால் 3 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாட்னா: பீகார் மாநிலத்தில் லஞ்சம் தர மறுத்த லாரி ஓட்டுனரை தாக்கியதால் 3 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 723 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை நாட்டில் 66 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். மேலும் நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்கிலும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுக்க சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

representative image: Bihar Police

இந்நிலையில், பீகார் மாநிலத்தில் உருளைக்கிழங்கு ஏற்றி வந்த லாரி ஓட்டுனரிடம் மூன்று போலீசார் லஞ்சம் கேட்டுள்ளனர். லாரியை நகரத்திற்குள் அனுமதிக்க வேண்டுமானால் லஞ்சம் தர வேண்டும் என்று லாரி ஓட்டுனரை போலீசார் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் லாரி ஓட்டுனர் லஞ்சம் தர மறுத்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த 3 போலீசாரும் அந்த ஓட்டுனரை துப்பாக்கியால் சுட்டு, காயப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஓட்டுனரின் புகாரின் அடிப்படையில் லஞ்சம் கேட்ட மூன்று போலீசாரும் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.