×

பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது; அதிபர் விளாடிமர் புடின் அறிவிப்பு!

ரஷ்யாவின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். இதனை இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது மாஸ்கோ: பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் விருதான ‘புனித ஆண்ட்ரூ’ விருது வழங்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். இந்தியா – ரஷ்யா இடையேயான உறவை வலுப்படுத்த சிறப்பாக செயல்பட்டதற்காக ‘புனித ஆண்ட்ரூ’ எனப்படும் அந்நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். இதனை
 

ரஷ்யாவின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். இதனை இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

மாஸ்கோ: பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் விருதான ‘புனித ஆண்ட்ரூ’ விருது வழங்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.

இந்தியா – ரஷ்யா இடையேயான உறவை வலுப்படுத்த சிறப்பாக செயல்பட்டதற்காக ‘புனித ஆண்ட்ரூ’ எனப்படும் அந்நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். இதனை இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இதர உலக நாடுகள் இதுவரை 8 சர்வதேச விருதுகளை பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்துள்ளது. அதன்படி, 2018-ஆம் ஆண்டுக்கான சியோல் அமைதி விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏழை பணக்காரர் இடையிலான சமூக மற்றும் பொருளாதார வித்தியாசத்தைக் குறைத்தது. உலக அமைதியை மேம்படச் செய்வதற்காக மோடி மேற்கொண்ட அர்ப்பணிப்பான செயல், உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்காக உழைத்தது, உலக அமைதிக்காக பங்காற்றியது உள்ளிட்ட காரணங்களுக்காக பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

பருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் பாரீஸ் உடன்படிக்கையைச் செயல்படுத்த முனைந்ததற்காகவும், 2022-ஆம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க நடவடிக்கை எடுத்ததற்காகவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த் எனும் விருதை கடந்த ஆண்டு தில்லியில் நடைபெற்ற விழாவில் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் வழங்கி கவுரவித்தார்.

அதேபோல், ஐக்கிய அரபு அமீரகமும் அந்நாட்டின் உயரிய விருதான ‘சயீத்’ விருதை இருதரப்புக்கும் இடையே ராணுவ உறவுகளை வலுப்படுத்தியதற்காக அந்நாடு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க

புல்வாமா தாக்குதலை பாக்., நடத்தியது மோடிக்கு உதவுவதற்கா?-கெஜ்ரிவால் கேள்வி?