×

பாலிவுட் நடிகர்களை சந்தித்த மோடி: வைரலாகும் புகைப்படம்!

பாலிவுட் இளம் நட்சத்திரங்கள் பலர் டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று சந்தித்துள்ளனர். புதுடெல்லி: பாலிவுட் இளம் நட்சத்திரங்கள் பலர் டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று சந்தித்துள்ளனர். பிரதமர் மோடி திரையுலக நட்சத்திரங்களைச் சந்திப்பதும், அவர்களது திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில் பாலிவுட் நட்சத்திரங்கள் நேற்று பிரதமர் மோடியை சந்தித்துள்ளனர். இயக்குநர் கரண் ஜோஹர், அலியா பட், ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், வருண் தவான், ராஜ்குமார் ராவ், சித்தார்த் மல்ஹோத்ரா, ஆயுஷ்மான் குரானா,
 

பாலிவுட் இளம் நட்சத்திரங்கள் பலர்  டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று சந்தித்துள்ளனர்.

புதுடெல்லி: பாலிவுட் இளம் நட்சத்திரங்கள் பலர்  டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று சந்தித்துள்ளனர்.

பிரதமர் மோடி திரையுலக நட்சத்திரங்களைச் சந்திப்பதும், அவர்களது திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில் பாலிவுட் நட்சத்திரங்கள் நேற்று பிரதமர் மோடியை சந்தித்துள்ளனர். இயக்குநர் கரண் ஜோஹர், அலியா பட், ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், வருண் தவான், ராஜ்குமார் ராவ், சித்தார்த் மல்ஹோத்ரா, ஆயுஷ்மான் குரானா, விக்கி கொளசல், பூமி பத்னேகர், ஏக்தா கபூர் பலர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது, திரைப்படங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றி வரும் பங்கு, கலாச்சாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி, கலந்துரையாடியதாகக் கூறப்படுகிறது.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.