×

பாலியல் பலாத்கார குற்றவாளிகளை நான் மன்னிக்க வேண்டும் என ஆலோசனை கூற இந்திரா ஜெய்சிங் யார்?… நிர்பயா தாயார் ஆவேசம்….

என் மகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை நான் மன்னிக்க வேண்டும் என ஆலோசனை கூற இந்திரா ஜெய்சிங் யார்? என நிர்பயாவின் தாயார் அவரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில், குற்றவாளிகள் 4 பேரும் பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கலிடப்பட உள்ளனர். இந்த சூழ்நிலையில், சோனியா காந்தி தனது கணவர் ராஜீவ் காந்தியை கொன்ற குற்றவாளியை மன்னித்தது மாதிரி, நீங்களும் உங்க மகளை பாலியல் பலாத்காரம் செய்த
 

என் மகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை நான் மன்னிக்க வேண்டும் என ஆலோசனை கூற இந்திரா ஜெய்சிங் யார்? என நிர்பயாவின் தாயார் அவரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில், குற்றவாளிகள் 4 பேரும் பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கலிடப்பட உள்ளனர். இந்த சூழ்நிலையில், சோனியா காந்தி தனது கணவர் ராஜீவ் காந்தியை கொன்ற குற்றவாளியை மன்னித்தது மாதிரி, நீங்களும் உங்க மகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை மன்னித்து விடுங்க என நிர்பயா தயாரிடம் மூத்த பெண் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் பரிந்துரை செய்து இருந்தார். இதற்கு நிருபயாவின் தாயார் ஆஷா தேவி, இந்திரா ஜெய்சிங்கை தாக்கி பேசியுள்ளார்.


  
இது தொடர்பாக ஆஷா தேவி கூறியதாவது: என் மகளை பாலியல் பலாத்காரம்  செய்ய குற்றவாளிகளை நான் மன்னிக்க பரிந்துரை செய்ய இந்திரா ஜெய்சிங் யார்? என் மகளை போன்றவர்களுக்காக நாடே குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என விரும்புகிறது. பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப்படவில்லை. இந்திரா ஜெய்சிங்கால் எப்படி தைரியமாக இது போன்ற பரிந்துரை செய்யமுடிகிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

பல ஆண்டுகள் நான் உச்ச நீதிமன்றத்தில் வைத்து சந்தித்து பேசி இருக்கிறேன். அவர் ஒரு முறை கூட என் நல்வாழ்வு குறித்து கேட்டதில்லை. இன்று அவர் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேசுகிறார். அத்தைகயவர்கள் தங்களது வாழ்வதாரத்துக்காக பாலியல் குற்றவாளிகளை ஆதரிக்கின்றனர். ஆகையால் பாலியல் பலாத்கார சம்பவங்களை தடுக்க முடியாது. மனித உரிமைகளின் உடையை வாழ்வதற்காக பயன்படுத்துகிறார். இவ்வாறு அவர் பேசினார்.