×

பாலத்திலிருந்து பறந்துவந்து நொறுங்கிய கார்! அதிரவைக்கும் வீடியோ

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் புதிதாக கட்டப்பட்ட பாலத்திலிருந்து கார் ஒன்று பறந்துவந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார். Greater Hyderabad Municipal Corporation Mayor has announced ex-gratia of Rs 5 lakhs to next of kin ofthe woman who died in the accident and medical assistance to the victims who received injuries. The flyover at Biodiversity Junction has been closed for three
 

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் புதிதாக கட்டப்பட்ட பாலத்திலிருந்து கார் ஒன்று பறந்துவந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

 

கச்சிபோலி பகுதியில் 69 கோடியே 47 லட்சம் செலவில் பாலம் ஒன்று புதிதாக திறக்கப்பட்டுள்ளது. அந்த பாலத்தில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. காரிலிருந்த ஏர் பேக் உடனடியாக செயல்பட்டதால் கார் ஓட்டுநர் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர். ஆனால் சாலையோரம் ஆட்டோவுக்காக நின்றுகொண்டிருந்த பெண் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விசாரணையில் கார் 104 கிலோ மீட்ட வேகத்தில் பறந்து வந்தது தெரியவந்தது. ஆனால் அந்த பாலத்தில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லதான் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 

இந்த விபத்தையடுத்து அந்த பாலம் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வேக கட்டுப்பாட்டு கருவி மற்றும் ஸ்பீட் பிரேக்கர் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஹைதரபாத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.