×

பாதுகாப்பு உபகரணங்கள் கேட்கும் மருத்துவர்கள்! – மருத்துவமனைகள் மீது மலர் தூவப்போவதாக முப்படைகள் அறிவிப்பு!

மருத்துவர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள், சமூக பாதுகாப்பு, கொரோனாவால் உயிரிழந்தால் கவுரவமான இறுதிச்சடங்கு வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், நாளை மருத்துவர்களை கவுரவிக்க ஶ்ரீநகர் முதல் திருவனந்தபுரம் வரை விமானப்படை விமானம் இயக்கப்படும் என்றும் மருத்துவமனைகள் மீது மலர்கள் தூவப்படும் என்றும் முப்படைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள், சமூக பாதுகாப்பு, கொரோனாவால் உயிரிழந்தால் கவுரவமான இறுதிச்சடங்கு வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், நாளை மருத்துவர்களை
 

மருத்துவர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள், சமூக பாதுகாப்பு, கொரோனாவால் உயிரிழந்தால் கவுரவமான இறுதிச்சடங்கு வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், நாளை மருத்துவர்களை கவுரவிக்க ஶ்ரீநகர் முதல் திருவனந்தபுரம் வரை விமானப்படை விமானம் இயக்கப்படும் என்றும் மருத்துவமனைகள் மீது மலர்கள் தூவப்படும் என்றும் முப்படைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள், சமூக பாதுகாப்பு, கொரோனாவால் உயிரிழந்தால் கவுரவமான இறுதிச்சடங்கு வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், நாளை மருத்துவர்களை கவுரவிக்க ஶ்ரீநகர் முதல் திருவனந்தபுரம் வரை விமானப்படை விமானம் இயக்கப்படும் என்றும் மருத்துவமனைகள் மீது மலர்கள் தூவப்படும் என்றும் முப்படைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் கூறுகையில், ஊரடங்கு நாட்களின்போது ஆபத்தை பொருட்படுத்தாமல் பணியாற்றி வரும் மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள், ஊடகத் துறையினருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தகுந்த முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டதால் பாதுகாப்புப் படையில் ஒருவருக்குக் கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை.
கொரோனா ஒழிப்பின் முன்னிலைப் பணியாளர்களுடன் ராணுவமும் உள்ளது என்ற ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் விதமாக முப்படை வீரர்கள் சில காரியங்களில் ஈடுபட உள்ளனர். ஶ்ரீநகர் முதல் திருவனந்தபுரம் வரை, அஸ்ஸாம் முதல் குஜராத் வரை இந்திய போர் விமானங்கள் பறந்து அவர்களுக்கு மரியாதையை செலுத்தும். விமானப்படை மற்றும் கடற்படை ஹெலிகாப்டர்கள் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மீது மலர்களைத் தூவும்.

கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் கடலில் அணிவகுத்து மரியாதை செலுத்துவார்கள். ராணுவத்தின் பேண்ட் வாத்திய குழுவினர் மருத்துவமனைகளின் முன்பு இசைத்தபடி மரியாதை செலுத்துவார்கள்.
கொரோனா தடுப்பில் போலீசாரின் பங்களிப்பை நினைவு கூறும் வகையில் டெல்லியில் உள்ள காவலர் நினைவிடத்தில் முப்படைத் தளபதிகள் மரியாதை செலுத்துவார்கள்” என்றார்.
மருத்துவர்கள் பாதுகாப்பு உபகரணங்கள், கருவிகள், தங்களுக்கு தங்க தரமான வசதிகள் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தகுந்த பாதுகாப்பு கருவிகள் இல்லாததால் மருத்துவர்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் மருத்துவமனைகள் மீது கிருமி நாசினி தெளிக்காமல் மலர்கள் தூவப்போவதாக ராணுவம் கூறியிருப்பது வரவேற்பைப் பெற்று வருகிறது. பிரதமர் மோடி முப்படைத் தளபதியின் அறிவிப்பை வரவேற்றுள்ளார்.