×

பாஜக பெண் எம்பிக்கு எதிராக ஆபாச பேச்சு: மக்களவையில் மன்னிப்பு கோரிய அசம் கான்

பாஜக பெண் எம்பிக்கு எதிராக ஆபாசமாகக் கருத்து தெரிவித்த சமாஜ்வாதி எம்.பி அசம் கான் மக்களவையில் வருத்தம் தெரிவித்துள்ளார். புதுடெல்லி: பாஜக பெண் எம்பிக்கு எதிராக ஆபாசமாகக் கருத்து தெரிவித்த சமாஜ்வாதி எம்.பி அசம் கான் மக்களவையில் வருத்தம் தெரிவித்துள்ளார். மக்களவையில் முத்தலாக் தடை மசோதா தொடர்பான விவாதத்தை, சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து பாஜக எம்.பி ரமா தேவி நடத்தினார். அப்போது இந்த விவகாரம் குறித்த விவாதத்தில் கலந்துகொண்ட சமாஜ்வாதி எம்.பி. அசம் கான், எம்பி ரமா
 

பாஜக பெண் எம்பிக்கு எதிராக ஆபாசமாகக் கருத்து தெரிவித்த சமாஜ்வாதி எம்.பி அசம் கான் மக்களவையில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:  பாஜக பெண் எம்பிக்கு எதிராக ஆபாசமாகக் கருத்து தெரிவித்த சமாஜ்வாதி எம்.பி அசம் கான் மக்களவையில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் முத்தலாக் தடை மசோதா தொடர்பான விவாதத்தை, சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து பாஜக  எம்.பி ரமா தேவி நடத்தினார். அப்போது  இந்த விவகாரம் குறித்த விவாதத்தில் கலந்துகொண்ட சமாஜ்வாதி எம்.பி. அசம் கான், எம்பி ரமா தேவியை பார்த்து, தனக்கு ரமா தேவியை மிகவும் பிடிக்கும். அதனால் தான் எப்பொழுதும் அவரையே பார்த்துக் கொண்டு இருக்கிறேன்’ என்றார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மற்ற எம்பிக்கள் அசம் கானுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டனர். 

இதில்  கட்சி, கொள்கை பாகுபாடின்றி  நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, திமுகவின் கனிமொழி உள்ளிட்ட பெண் எம்.பி.க்கள் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.  இதற்கு பதிலளித்த அசம் கான் என்னால் மன்னிப்பு கேட்க முடியாது. வேண்டுமானால் என் பதவியை ராஜினாமா  செய்கிறேன் என்றார். 

இதையடுத்து  மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அசம்  கானுக்கு எதிராக என்ன நடவடிக்கை என்பது குறித்து  அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்ததுடன், வரும் திங்கட்கிழமை அசம் கான் பகிரங்க மன்னிப்பு கேட்க  வேண்டும் என  உத்தரவிட்டுள்ளார். அதை அவர் மீறும் பட்சத்தில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். 

இந்நிலையில், இன்று மக்களவையில் பேசிய அசம் கான்,  தனது பேச்சு அவைத்தலைவருக்குத் தவறு என்றுபட்டிருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்வதாகக் கூறினார். இதையடுத்து பேசிய பாஜக  எம்.பி. ரமா தேவி,  அசம்  கானின் இந்த பேச்சு, பெண்கள் மட்டுமில்லாது ஆண்களுக்கும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது.  இதுபோன்ற பேச்சுக்களைக் கேட்க பெண்கள் மக்களவைக்கு வருவதில்லை’ என்றார். இதை தொடர்ந்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அசம் கான் மன்னிப்பு கோரிவிட்டதாக அறிவித்தார்.