×

பல்வேறு குற்றச்சாட்டுகள்பேரில் கோபிநாதன் ஐ.ஏ.எஸ்ஸுக்கு ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸ்!

ஐ.ஏ.எஸ். அதிகாரிகூட அரசாங்கத்தை எதிர்த்து கருத்து சொல்வாரா என அனைவரும் அதிசயித்திருக்க, தன்மீது நடைபெறும் துறைரீதியான விசாரணையை திசைதிருப்பவே அவர் மேற்படி ஸ்டண்ட் அடித்திருக்கிறாரோ என தோன்றும் அளவுக்கு செய்திகள் வருகின்றன. காஷ்மீரில் மனித உரிமைகள் நசுக்கப்படுவதாகவும், தனது எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்காக தனது ஐ.ஏ.ஏஸ் பதவியை ராஜினாமா செய்வதாக கேரளாவைச் சேர்ந்த கண்ணன் கோபிநாதன் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். அட, ஐ.ஏ.எஸ். அதிகாரிகூட அரசாங்கத்தை எதிர்த்து கருத்து சொல்வாரா என அனைவரும் அதிசயித்திருக்க, தன்மீது
 

ஐ.ஏ.எஸ். அதிகாரிகூட அரசாங்கத்தை எதிர்த்து கருத்து சொல்வாரா என அனைவரும் அதிசயித்திருக்க, தன்மீது நடைபெறும் துறைரீதியான விசாரணையை திசைதிருப்பவே அவர் மேற்படி ஸ்டண்ட் அடித்திருக்கிறாரோ என தோன்றும் அளவுக்கு செய்திகள் வருகின்றன.

காஷ்மீரில் மனித உரிமைகள் நசுக்கப்படுவதாகவும், தனது எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்காக தனது ஐ.ஏ.ஏஸ் பதவியை ராஜினாமா செய்வதாக கேரளாவைச் சேர்ந்த கண்ணன் கோபிநாதன் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். அட, ஐ.ஏ.எஸ். அதிகாரிகூட அரசாங்கத்தை எதிர்த்து கருத்து சொல்வாரா என அனைவரும் அதிசயித்திருக்க, தன்மீது நடைபெறும் துறைரீதியான விசாரணையை திசைதிருப்பவே அவர் மேற்படி ஸ்டண்ட் அடித்திருக்கிறாரோ என தோன்றும் அளவுக்கு செய்திகள் வருகின்றன.

கண்ணன் கோபிநாதன் டையு டாமன் யூனியன் பிரதேச மின்துறை செயலராக பணியாற்றி வருகிறார். அவருடைய ராஜினாமா ஏற்கப்படவில்லை. பணியில் தொடர அரசு அறிவித்துவிட்டது. ஆனால், அதற்கு முன்பாகவே, அதாவது காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ஆவது பிரிவை நீக்கும் மத்திய அரசின் முடிவு வெளியாவதற்கு முன்பே அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள்சுமத்தி அவரிடமிருந்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

பிரதமரின் பல்வேறு விருதுகளுக்கு தகுதியானவர்கள் பட்டியல் சமர்ப்பிக்காதது, உரிய நேரத்தில் பணிகள் முடிக்கப்படாதது, முடிக்கப்பட்ட பணிகளுக்கான அறிக்கையை சமர்ப்பிக்காதது என பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும்படி கண்ணன் கோபிநாதனை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த நோட்டீஸ் விவகாரம் வெளியே கசிவதற்குமுன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகதான் ராஜினாமா செய்வதாக கோபிநாதன் அறிவிப்பு வெளியிட்டு திசைதிருப்பியிருக்கலாம் என கருதப்படுகிறது!