×

பல்லை காட்டிய சீன பி.பி.இ. கருவிகள்…. வந்தததில் 63 ஆயிரம் கருவிகள் தர சோதனையில் தேறவில்லை…

அவசர அவசரமாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் கருவிகளில் பெரும்பாலானவை இந்திய தர சோதனையில் தேர்ச்சி பெறவில்லை என தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கையில் தன்னலம் கருதாமல் சுகாதார மற்றும் மருத்துவ பணியாளர்கள் அயராது உழைத்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான தனிநபர் பாதுகாப்பு உபகரண (பி.பி.இ.) கருவிகள் நம்மிடம் போதுமான அளவில் இல்லை. இதனையடுத்து சீனாவிலிருந்து தனிநபர் பாதுகாப்பு உபகரண கருவிகள் இறக்குமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
 

அவசர அவசரமாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் கருவிகளில் பெரும்பாலானவை இந்திய தர சோதனையில் தேர்ச்சி பெறவில்லை என தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கையில் தன்னலம் கருதாமல் சுகாதார மற்றும் மருத்துவ பணியாளர்கள் அயராது உழைத்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான தனிநபர் பாதுகாப்பு உபகரண (பி.பி.இ.) கருவிகள் நம்மிடம் போதுமான அளவில் இல்லை. இதனையடுத்து சீனாவிலிருந்து தனிநபர் பாதுகாப்பு உபகரண கருவிகள் இறக்குமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. தனிநபர் பாதுகாப்ப உபகரண கருவிகளில், முககவசங்கள், கண் கவசங்கள், சூ கவர்ஸ், கவுன்ஸ் மற்றும் கிளவுஸ் உள்ளிட்டவை இருக்கும்.

கடந்த சில தினங்களுக்கு முன் சீனாவிலிருந்து, கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் சுகாதார நிபுணர்கள்  பயன்படுத்துவதற்காக நன்கொடையாக அளிக்கும் கருவிகள உள்பட மொத்தம் 1.70 லட்சம் பி.பி.இ. கருவிகள் சீனாவிலிருந்து கடந்த சில தினங்களுக்கு நம் நாட்டில் வந்து இறங்கியது. அவற்றை தர பரிசோதனை செய்தததில் கணிசமான கருவிகள் இந்திய தரநிலைக்கு ஏற்ப இல்லை என்பது தெரியவந்துள்ளது. 

இது தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், சீனாவிலிருந்து வந்த மொத்தம் 1.70 லட்சம் பி.பி.இ. கருவிகளும் தர சோதனைக்காக குவாலியரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டன. அவற்றை பரிசோதனை செய்தததில் 63 ஆயிரம் பி.பி.இ. கருவிகள் தர சோதனையில் தேர்ச்சி பெறவில்லை என தெரிவித்தன. பொதுவாக சீன தயாரிப்புகள் தரமாக இருக்காது என்ற கூறப்படுவது உண்டு. தற்போது பி.பி.இ. கருவிகள் விவகாரத்தில் அது உண்மையாகி உள்ளது. சீனாவை தவிர்த்து சிங்கப்பூரிலிருந்து 2 லட்சம் பி.பி.இ. கருவிகள் இறக்குமதி செய்ய மத்திய அரசு ஆர்டர் கொடுத்துள்ளது. அவை விரைவில் இந்தியாவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.