×

பரபரப்புக்கு மத்தியில் சபரிமலை நடை இன்று திறப்பு! உச்சகட்ட பாதுகாப்பு!

10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்குப் பாதுகாப்பு தரமுடியாது. நீதிமன்றத்தில் உரிய அனுமதி வாங்கி வந்தால் மட்டுமே பாதுகாப்பு தரப்படும் மண்டல, மகரவிளக்கு பூஜைகளுக்காகச் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. இதனால் பெண்கள் பலர் ஐயப்பனை தரிசிக்க ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். அவர்களை அனுமதிக்கலாமா? வேண்டாமா? ஒருவேளை அனுமதித்தால் கடந்த ஆண்டு போல பிரச்சனை வெடிக்குமா என்று தேவசம் போர்டு சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அமைச்சர்களுடன் நடத்தப்பட்ட அந்த ஆலோசனையில் சபரிமலைக்கு
 

10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்குப் பாதுகாப்பு தரமுடியாது.  நீதிமன்றத்தில் உரிய அனுமதி வாங்கி வந்தால் மட்டுமே  பாதுகாப்பு தரப்படும்

மண்டல, மகரவிளக்கு பூஜைகளுக்காகச்  சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை  திறக்கப்படுகிறது. இதனால் பெண்கள் பலர் ஐயப்பனை தரிசிக்க ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். அவர்களை அனுமதிக்கலாமா? வேண்டாமா? ஒருவேளை அனுமதித்தால் கடந்த ஆண்டு போல பிரச்சனை வெடிக்குமா என்று தேவசம் போர்டு சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. 

அமைச்சர்களுடன் நடத்தப்பட்ட அந்த ஆலோசனையில் சபரிமலைக்கு வரும் பெண்களிடம் பிரச்னைகளை எடுத்துச்சொல்லி திருப்பி அனுப்பி விடலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.  இதை உறுதிசெய்யும் வகையில் கேரள அமைச்சர் சுரேந்திரன், ‘சபரிமலைக்கு வரும் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்குப் பாதுகாப்பு தரமுடியாது.  நீதிமன்றத்தில் உரிய அனுமதி வாங்கி வந்தால் மட்டுமே  பாதுகாப்பு தரப்படும் என்றும் சபரிமலைக்கு  வர நினைக்கும் பெண்கள் நீதிமன்றத்தை நாடட்டும்’ என்று கூறி பரபரப்பை  கிளப்பினார். கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘அனைத்து வயது பெண்களையும், சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பு இன்னும் அமலில் தான் உள்ளது. தீர்ப்பு எதுவாக இருந்தாலும், அதை அமல்படுத்த அரசு தயாராக உள்ளது” என தெரிவித்துள்ளார். இதனால் பெண்கள் அனுமதிக்கப்படுவார்களா? இல்லையா என்ற குழப்பம் நீடித்த வருகிறது. 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சமூக செயற்பாட்டாளர் திருப்தி தேசாய், ‘பாதுகாப்பு வழங்கினாலும் இல்லாவிட்டாலும், சபரிமலைக்கு போவது உறுதி. அனுமதி மறுப்பது நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயல் ‘ என்று கூறியுள்ளார். 

இந்நிலையில் சபரிமலையில் அசம்பாவிதங்களைத் தடுக்கும்  வகையில்  10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழலே நிலவுகிறது.