×

பயண விவரங்களை மறைத்தால்….. பாஸ்போர்ட் பறிமுதல் உள்பட கடுமையான நடவடிக்கை…சாட்டையை சுழற்றிய பஞ்சாப் முதல்வர்…

பயண விவரங்களை மறைத்தது கண்டுடிபிடிக்கப்பட்டால் பாஸ்போர்ட் பறிமுதல் உள்பட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் எச்சரிக்கை செய்தார். இந்தியாவில் கொரோனா வைரஸ் முதலில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களால் பரவ தொடங்கியது. மேலும் கடந்த மாதம் டெல்லி நிஜாமுதீனில் நடந்த தப்லீக் ஜமாத் மதமாநாட்டில் கலந்து கொண்டவர்களால் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று கொரோனா வைரஸ் தொடர்பான சர்வே எடுத்து வருகின்றனர்.
 

பயண விவரங்களை மறைத்தது கண்டுடிபிடிக்கப்பட்டால் பாஸ்போர்ட் பறிமுதல் உள்பட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் எச்சரிக்கை செய்தார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் முதலில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களால் பரவ தொடங்கியது. மேலும் கடந்த மாதம் டெல்லி நிஜாமுதீனில் நடந்த தப்லீக் ஜமாத் மதமாநாட்டில் கலந்து கொண்டவர்களால் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று கொரோனா வைரஸ் தொடர்பான சர்வே எடுத்து வருகின்றனர்.

பஞ்சாப்பில் கடந்த சனிக்கிழமையன்று  கொரோனா வைரஸ் நிலவரம் தொடர்பாக அம்மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையில் அம்மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டம் தொடர்பாக அம்மாநில தலைமை செயலர் கரண் அவதார் சிங் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

காவல்துறை மற்றும் சுகாதார துறை பணியாளர்களிடம் தங்களது பயண விவரங்களை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது பாஸ்போர்ட் பறிமுதல் உள்பட பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்தார். மேலும் கொரோனா வைரசுக்கு எதிரான மாநில அரசின் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக, ஓய்வில் செல்லும் சுகாதார துறை பணியாளர்களின் பணியை மேலும் 3 மாதத்துக்கு நீட்டிக்க உத்தரவிட்டார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.