×

பதவியேற்பு விழா: அரசியல் தலைவர்களை புறக்கணித்து 1 வயது சிறுவனுக்கு அழைப்பு விடுத்த கெஜ்ரிவால்!

டெல்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது அரவிந்த் கெஜ்ரிவால் போன்று உடையணிந்து கவனம் ஈர்த்த குட்டி குழந்தைக்கு அவரது பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெல்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது அரவிந்த் கெஜ்ரிவால் போன்று உடையணிந்து கவனம் ஈர்த்த குட்டி குழந்தைக்கு அவரது பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்துமுடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 70 தொகுதிகளில் 62 இடங்களை கைப்பற்றி வெற்றிப்பெற்றது. மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்ததால் ஆம் அத்மி
 

டெல்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது அரவிந்த் கெஜ்ரிவால் போன்று உடையணிந்து கவனம் ஈர்த்த குட்டி குழந்தைக்கு அவரது பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

டெல்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது அரவிந்த் கெஜ்ரிவால் போன்று உடையணிந்து கவனம் ஈர்த்த குட்டி குழந்தைக்கு அவரது பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

டெல்லியில் நடந்துமுடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 70 தொகுதிகளில் 62 இடங்களை கைப்பற்றி வெற்றிப்பெற்றது. மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்ததால் ஆம் அத்மி தொண்டர்கள் டெல்லி முழுவதும் ஆரவாரத்தில் ஈடுபட்டனர். ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் முன்பு திரண்ட தொண்டர்களுடன் ஒரு வயது சிறுவன் மாஃப்ளர், அரவிந்த் கெஜ்ரிவால் போன்று வேடமணிந்து தொப்பி, கண்ணாடி அணிந்து தொண்டர்களின் கவனத்தை ஈர்த்தார். தொண்டர்களுடன் இணைந்து வெற்றியை கொண்டாடிய அந்த சிறுவனின் செயல் ஊடகங்களை வெகுவாக கவர்ந்தது. 

 

 

இந்நிலையில் பிப்.16 ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழாவிற்கு மாஃபளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி ட்விட்டரில் தெரிவித்துள்ளது. பதவியேற்பு விழாவில் பிற மாநில முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு இல்லை. அவரது தலைமை மீது நம்பிக்கை கொண்ட டெல்லி மக்கள் முன்னிலையிலேயே கெஜ்ரிவால் பதவி பிரமாணம் செய்து கொள்வார் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கோபால் ராம் தெரிவித்துள்ளார்.