×

படேல் சிலை வளாகத்தில் மிகப் பெரிய ஊழல் : பரபரப்பு புகார்!

சர்தார் வல்லபாய் படேலின் சிலை உள்ள வளாகத்தில் மணல் அள்ளுவதில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குஜராத்: சர்தார் வல்லபாய் படேலின் சிலை உள்ள வளாகத்தில் மணல் அள்ளுவதில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் நினைவை போற்றும் வகையில், குஜராத் மாநிலம் ஜாம்நகரர் மாவட்டத்தில் நர்மதை அணை அருகில் அவருக்கு உலகிலேயே மிக உயரமான சிலை அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 787 அடி
 

சர்தார் வல்லபாய் படேலின் சிலை உள்ள வளாகத்தில் மணல் அள்ளுவதில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

குஜராத்: சர்தார் வல்லபாய் படேலின் சிலை உள்ள வளாகத்தில் மணல் அள்ளுவதில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் நினைவை போற்றும் வகையில், குஜராத் மாநிலம் ஜாம்நகரர் மாவட்டத்தில் நர்மதை அணை அருகில் அவருக்கு உலகிலேயே மிக உயரமான சிலை அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 787 அடி உயரம் கொண்ட படேலின் சிலை, ரூ.3,000 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு ஒற்றுமையின் சிலை எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சிலையின் வளாகத்தில் பழங்குடியினர் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. அதற்காக மணல் அள்ளப்பட்டு நிலத்தை சமன் செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில்  மாபெரும் ஊழல் நடந்துள்ளதாக நர்மதா மாவட்ட காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகாரில், அருங்காட்சியகம்  பெயரில்  4.5 மெட்ரிக் டன் எடையுள்ள மணல் திருடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில்  ரூ.7 கோடி மதிப்புள்ள மணல் திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.  இந்த விவகாரம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதியப்படும் கூறப்படுகிறது.