×

பங்குச் சந்தை சரிவை சந்தித்த போதும் லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்….. சென்செக்ஸ் 164 புள்ளிகள் வீழ்ச்சி…..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மோசமாக இருந்தது. சென்செக்ஸ் 164 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. கடந்த சில வர்த்தக தினங்களாக பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டு இருந்ததால் பல முன்னணி நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து இருந்தது. இதனையடுத்து லாப நோக்கம் கருதி அந்த பங்குகளை அதிகளவில் விற்பனை செய்தனர். மேலும் கொரோனா வைரஸ் தாக்கம் அடுத்த சில மாதங்களில் பொருளாதாரத்தில் வெளிப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இது போன்ற காரணங்களால் இன்று பங்குச் சந்தைகளில்
 

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மோசமாக இருந்தது. சென்செக்ஸ் 164 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

கடந்த சில வர்த்தக தினங்களாக பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டு இருந்ததால் பல முன்னணி நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து இருந்தது. இதனையடுத்து லாப நோக்கம் கருதி அந்த பங்குகளை அதிகளவில் விற்பனை செய்தனர். மேலும் கொரோனா வைரஸ் தாக்கம் அடுத்த சில மாதங்களில் பொருளாதாரத்தில் வெளிப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இது போன்ற காரணங்களால் இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் படுத்தது.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில்  என்.டி.பி.சி., ஓ.என்.ஜி.சி., ஆக்சிஸ் வங்கி, எச்.சி.எல். டெக்னாலஜிஸ் மற்றும் ஹீரோமோட்டோகார்ப் உள்பட 13 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. இண்டஸ்இந்த் வங்கி, மகிந்திரா அண்டு மகிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல் மற்றும் பார்தி ஏர்டெல் உள்பட 17 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. நிறுவன பங்குகளின் விலை சரிந்தது. நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.159.26 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.22 ஆயிரம் கோடி லாபம் பார்த்தனர்.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 164.18 புள்ளிகள் சரிந்து 41,141.85 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 39.60 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 12,098.35 புள்ளிகளில் நிலைகொண்டது.