×

நேர்மையாக நடவடிக்கை எடுப்பேன்னு மோடியிடம் ஜின்பிங் சொன்னாரு- வெளியுறவு துறை செயலர் தகவல்

வர்த்த பற்றாக்குறையை குறைப்பதற்கு நேர்மையாக நடவடிக்கை எடுப்பேன் என பிரதமர் மோடியிடம் சீன அதிபர் ஜின்பிங் வாக்குறுதி அளித்ததாக நமது வெளியுறவு துறை செயலர் தெரிவித்தார். சீன அதிபர் ஜி ஜின்பிங் 2 நாள் பயணமாக கடந்த 11ம் தேதி நம் நாட்டுக்கு வருகை தந்தார். சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அமைப்புசாரா உச்சிமாநாட்டில் நடந்த சந்திப்பு என்பதால் இதில் எந்தவித ஒப்பந்தங்களும் கையெழுத்தாகவில்லை. அதேசமயம் இரு தலைவர்களும் வர்ததகம் உள்ளிட்ட
 

வர்த்த பற்றாக்குறையை குறைப்பதற்கு நேர்மையாக நடவடிக்கை எடுப்பேன் என பிரதமர் மோடியிடம் சீன அதிபர் ஜின்பிங் வாக்குறுதி அளித்ததாக நமது வெளியுறவு துறை செயலர் தெரிவித்தார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் 2 நாள் பயணமாக கடந்த 11ம் தேதி நம் நாட்டுக்கு வருகை தந்தார். சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.  அமைப்புசாரா உச்சிமாநாட்டில் நடந்த சந்திப்பு என்பதால் இதில் எந்தவித ஒப்பந்தங்களும் கையெழுத்தாகவில்லை. அதேசமயம் இரு தலைவர்களும் வர்ததகம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து தீவிர  ஆலோசனை நடத்தினர். இரு நாட்டு தலைவர்களும் ஒன்றாக சுமார் 5 மணி நேரம் செலவிட்டனர்.

மாமல்லபுரம் மற்றும் கோவளத்தில், பிரதமர் மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான இரண்டு நாட்கள் நடந்த அமைப்புசாரா உச்சிமாநாடு சந்திப்பு நேற்று இனிதாக நிறைவடைந்தது. இதனையடுத்து நேற்று சென்னையிலிருந்து சீன அதிபர் தனது பயண திட்டத்தின்படி நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுக்கு கிளம்பி சென்றார்.

பிரதமர் நரேந்திர மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு குறித்து வெளியுறவு துறை அமைச்சர் விஜய் கோக்ளே செய்தியாளர்களிடம் கூறுகையில், இரு தலைவர்களும் வர்த்தகம் தொடர்பாக சிறப்பாக ஆலோசனை செய்தனர். வர்த்தக பற்றாக்குறை குறித்து சீன அதிபரிடம் மோடி கவலை  தெரிவித்தார். இதனையடுத்து இது தொடர்பாக நேர்மையாக நடவடிக்கை எடுப்பதாகவும், எப்படி வர்த்த பற்றாக்குறை குறித்து தீவிரமாக ஆலோசனை செய்வதாகவும் மோடியிடம் ஜின்பிங் வாக்குறுதி கொடுத்தார் என தெரிவித்தார்.